முதல்வரை கடத்துவேன் - மிரட்டல் விடுத்த இளைஞர் !

0
முதல்வர் எடப்பாடியை கடத்துவேன் என தொலைப் பேசியில் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் பேசிய மர்ம தொலைபேசி ஒன்று வந்தது. 
முதல்வரை கடத்துவேன்
அதில் பேசிய நபர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தான் கடத்த உள்ளதாக தெரிவித்து போனை வைத்து விட்டார். இதனால் அதிர்ந்துப் போன கட்டுப் பாட்டறை காவலர்கள் மேலதிகாரி களுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போனில் பேசிய நபரை பிடிக்க உத்தர விடப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப் பட்டது.

போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் போன் கால் திருச்சி, தில்லை நகரிலிருந்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் சம்பந்தப்பட்ட எண்ணில் பேசிய நபரை பிடித்தனர்.

அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ரஹ்மதுல்லா என்பதும், அருகில் உள்ள துரித உணவகத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. 

சமீப காலமாக மன உளைச்சலில் இருந்த அவர், வேலையி லிருந்து நீக்கப் பட்டதும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இவ்வாறு போன் செய்ததாக தெரிய வந்தது.
போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக குண்டு வைப்பதாகத் தான் போன் கால் வரும், இந்த முறை முதல்வரையே கடத்தப் போகிறேன் என்று போன் வரவும் போலீஸார் பரபரப்பாகி விட்டனர். 

ஆனால் முதல்வர் வழக்கம் போல் தனது துறையான காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து பேசிக்கொண் டிருந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)