டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
ஒருவர் பிரபலமாக வேண்டுமெனில் இன்றைய டெக்னாலஜி கால கட்டத்தில் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. சமூக வலை தளங்களில் தொடர்ந்து ஸ்டேட்டஸுகள், கருத்துகளை பகிர்ந்தாலே நீங்கள் பிரரபலமாக லாம். அதில் ஒரு வகைதான் சமூக வலை தளத்தில் டிரெண்டை உருவாக்குவது அல்லது பின்பற்றுவது.
டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச்அப்படி தற்போது யாரோ போஸ்ட் செய்த ஃபுல்ஜார் சோடா என்னும் வீடியோ சேலஞ் பலராலும் பின்பற்றப்பட்டு கேரளாவை கலக்கி வருகிறது.

அதாவது ஒரு கண்ணாடி கிளாஸில் சோடாவை நிரப்ப வேண்டும். 10 பச்சை மிளகாய் , இஞ்சி, புதினா , எலுமிச்சை சாறு , உப்பு ஆகிய வற்றை மைய அரைத்து அதில் சப்ஜா விதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் ஷாட் கிளாசில் அதை சேர்த்து தண்ணீர் நிரப்பி அப்படியே அந்த சோடா நிரம்பிய கிளாஸில் போட வேண்டும். பின் அது பொங்கி ஊற்றத் துவங்கும். 

உடனே அதை ஒரே வாயில் இடைவெளி விடாமல் குடித்து முடிக்க வேண்டும். இது தான் இந்த ஃபுல்ஜார் சோடா சேலஞ். ஃபுல் ஜார் என்பதற்கு ஜார் முழுவதும் சோடா என்று அர்த்தமாம். மொத்தத்தில் இது காரம் மற்றும் சோடா இணைந்து மண்டைக்கு ஏறும் விறுவிறு சேலஞ்.No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close