ரெயில்களை தனியார் மயமாக்க மத்திய அரசு அனுமதி !

0
பயணிகள் போக்குவரத்தில் பஸ், விமானம், கப்பல் சேவைகளில் அரசு மட்டுமின்றி தனியாருக்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இந்திய ரெயில்வே போக்குவரத்தில் மட்டும் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. ரெயில்வே அமைச்சகமும் தனி பட்ஜெட் தயாரித்து, அந்த போக்குவரத்து சேவையை மேற்கொண்டுள்ளது.
ரெயில்களை தனியார் மயமாக்க மத்திய அரசு அனுமதி



உலகின் 4-வது பெரிய ரெயில் சேவையான இந்தியன் ரெயில்வேயில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 69 ஆயிரத்து 182 கி.மீ. தொலைவுக்கு இருப்பு பாதையை கொண்ட இந்திய ரெயில்வே தினமும் நூற்றுக் கணக்கான ரெயில்வே சேவைகளை இயக்கி வருகிறது.
பல கோடி பேர் தினமும் ரெயில் போக்கு வரத்தையே நம்பி யுள்ளனர். பெரும்பாலான சரக்கு போக்குவரத்தும் ரெயில்கள் மூலம் நடத்தப் படுகிறது. அந்த வகையில் இந்திய ரெயில் வேக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. எதிர் காலத்தில் மேலும் பல புதிய வழித்தடங்கள் அமைத்து வருவாயை பெருக்க முடிவு செய்துள்ளனர். 

அதிவேக ரெயில் சேவை களையும் கொண்டு வர உள்ளனர். இந்த திட்டங் களுக்கு கூடுதல் நிதி தேவைப் படுகிறது. இதைத் தொடர்ந்து ரெயில்வேக்கு எந்தெந்த வழிகளில் வருவாயை அதிகரிக்க முடியும் என்று ஆய்வு நடந்து வருகிறது. அந்த அடிப்படை யில் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத அதாவது வருவாய் அதிகம் இல்லாத பயணிகள் ரெயில் சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

அது போல குறைந்த வருவாயை தரும் சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும் ரெயில் சேவை களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. 100 நாட்களுக்குள் இது தொடர்பான ஏலத்தொகை க்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதிக ஏலத்தொகை கேட்கும் தனியாருக்கு, பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத ரெயில் சேவையை ஒப்படைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.



முதல் கட்டமாக பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு பயணிகள் ரெயிலையும், ஒரு சுற்றுலா ரெயிலையும் தனியார் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அடுத்து ரெயில் சேவையை இயக்க வாய்ப்பு வழங்கப்படும். அந்த தனியார், அந்த ரெயிலுக்கு புதிய பெயரை சூட்டிக் கொள்ளலாம்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க எளிய வழிகள் !
ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் வாடகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படும். அந்த ரெயில்வே பெட்டிகள் ஐ.ஆர்.சி.டி.சி பொறுப்பில் விடப்படும் டிக்கெட் விற்பனையும் ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவே நடைபெறும். 

இந்த திட்டத்தால் தனியார் ரெயில்களை இயக்குவதோடு, ரெயில்வே அமைச்சகத் துக்கும் அதிகப்படியான லாபம் கிடைக்கும். முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஒன்று தனியாருக்கு விடப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)