கணையம் என்றால் என்ன? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

கணையம் என்றால் என்ன?

Subscribe Via Email

கணையம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால், பலரும் யோசிப்பார்கள். காரணம், கணையம் குறித்த விழிப்புணர்வு படித்தவர் களிடம் கூட இல்லை.
கணையம் என்றால் என்ன?
மது குடிப்பவர் களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் கணையத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ‘மதுவுக்கும் கல்லீரலுக்கும் தானே தொடர்பு இருக்கிறது… கணையத் துக்குமா’ என்று கேட்கிறீர்கள் தானே? 

கணையம் ஒரு கலப்படச் சுரப்பி நம் வயிற்றில், இரைப் பைக்குக் கீழே, சிறிது பின்புறமாக, முன்சிறுகுடலுக்கு இடது பக்கமாக, மாவிலை வடிவத்தில், ஊதாவும் மஞ்சளும் கலந்த நிறத்தில், தட்டையாக ஓர் உறுப்பு உள்ளது.

அது தான் ‘கணையம்’ (Pancreas). இதன் நீளம் அதிகபட்சமாக 20 செ.மீ. எடை 100 கிராம் வரை இருக்கும். இது ஒரு கலப்படச் சுரப்பி (Dual Gland). இதில் நாளமுள்ள சுரப்பிகளும் உள்ளன. 

நாளமில்லா சுரப்பிகளும் உள்ளன. நாளமுள்ள சுரப்பிகள், என்சைம்கள் அடங்கிய உணவுச் செரிமான நீர்களைச் சுரக்கின்றன.

இந்தச் செரிமான நீர்கள் ‘கணைய நாளம்’ வழியாக முன் சிறு குடலுக்குச் சென்று, கொழுப்பு, புரதம், மாவுப்பொருள் ஆகிய உணவுச் சத்துகள் செரிப்பதற்கு உதவுகின்றன.கணையத்தில் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ (Islets Of Langerhans) எனும் சிறப்புத் திசுக்கள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன.  ஆரோக்கியமாக உள்ள நபரிடம் சுமார் 10 லட்சம் திட்டுகள் உள்ளன. ஒவ்வொரு திட்டிலும் 3000 முதல் 4000 வரை செல்கள் உள்ளன. 

இந்த செல்கள் ஆல்பா, பீட்டா, டெல்டா என்று 3 வகைப்படும். இவற்றில் ‘பீட்டா’ செல்கள் இன்சுலினையும், ஆல்பா செல்கள் குளுக்ககான் ஹார்மோனை யும், டெல்டா செல்கள் சொமோட் டோஸ்டேடின் ஹார்மோனையும் சுரக்கின்றன. 
இவை ‘நாளமில்லா சுரப்பிகள்’ என்பதால், தாம் சுரக்கின்ற ஹார்மோன் களை ரத்தத்தில் நேரடியாகவே சேர்த்து விடுகின்றன. இப்படி ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்கிற உறுப்பு நம் உடலில் வேறு எதுவும் இல்லை.

கணைய நீர் செய்யும் பணிகள் கணையம், புரத உணவின் செரிமானத் துக்கு டிரிப்சின், கைமோடிரிப்சின், கார்பாக்சி பெப்டிடேஸ் ஆகிய 3 வித என்சைம் களை சுரக்கிறது. 

டிரிப்சின், கைமோடிரிப்சின் - இரண்டும் உணவிலுள்ள புரத மூலக்கூறுகளை உடைத்து பெப்டைடுக ளாக மாற்றுகின்றன.இந்த பெப்டைடு களை கார்பாக்சி பெப்டிடேஸ் உடைத்து அமினோ அமிலங்களாக மாற்றி ரத்தம் வழியாக கல்லீரலுக்கு அனுப்புகிறது. கணைய நீர்ச் சுரப்பில் அமிலேஸ் எனும் என்சைம் உள்ளது. இது உணவில் உள்ள ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றுகிறது. 
லைப்பேஸ் என்சைம் கொழுப்பு உணவை கொழுப்பு அமிலமாகவும் கிளிசராலாகவும் மாற்றுகிறது. இவை அனைத்தும் குடலில் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன.

இரைப்பை யிலிருந்து சிறுகுடலுக்கு வரும் உணவுக் கூழில் உள்ள அமிலத் தன்மையை நீக்கி சரிசெய்ய கணையம் ‘பைகார்பனேட் அயனி’களைச் சுரந்து சிறு குடலுக்கு அனுப்பி வைக்கிறது.

இவ்வாறு கணையம் உணவு செரிமானத்தில் முக்கியப் பங்கெடுத்துக் கொள்கிறது.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close