டயாபடீக் நியுரோபதிக்கான சிகிச்சை பற்றி தெரியுமா?

0
வீடு அல்லது அலுவலகம் எதுவாக யிருந்தாலும் இன்றைய உலகம் இணைய உலகமாக மாறி விட்டது. மக்களும் தங்களின் கண்களின் பயன்பாட்டை அதிகரித்துக் கொண்டிருக் கிறார்கள். அத்துடன் கண்களுக் கான தற்காப்பையோ அல்லது பாதுகாப்பையோ குறித்து அதிகம் அக்கறைக் கொள்வதில்லை. விளைவு முதுமையைத் தொடும் முன்னரே பார்வைத் திறன் குறைபாடால் பாதிக்கப் படுகிறார்கள்.
டயாபடீக் நியுரோபதிக்கான சிகிச்சை


அதிலும் சர்க்கரையின் அளவை கட்டுப் படுத்தாமல் இருப்பவர்களில் 90 சதவீதத்தின ருக்கு மேல் பார்வை திறன் பாதிப்பை சந்திக்கி றார்கள். சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளா விட்டால் நரம்பு மண்டலம், இரத்த குழாய், இதயம் என ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படையத் தொடங்குகிறது. நரம்பு மண்டலம் பாதிக்கப் படுவதைத் தான் டயாபடீக் நியுரோபதி என்கிறோம். உலகில் உள்ள எந்த பிம்பத்தைக் காண வேண்டும் என்றாலும் அதற்கு விழித்திரை அவசியம். 

இந்நிலையில் சர்க்கரையின் அளவை கட்டுக்கள் வைத்திருக்கா விட்டால், விழித்திரைக்கு செல்லும் நுட்பமான இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, இரத்த கசிவு ஏற்படும். அத்துடன் புதிதாக நுண்ணிய இரத்த குழாய்கள் வளரத் தொடங்கும். இதன் காரணமாக பார்வைத்திறன் குறைய ஆரம்பிக்கும். இதனை கவனிக்கா விடில் ரெட்டினா முழுவதும் மறைக்கப்பட்டு பார்வை பறிபோகும் நிலையும் உருவாகும்.


அதனால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப் பவர்களும், வைக்க தடுமாறு கிறவர்களும் அவசியம் பார்வையில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் கூட உடனடியாக indirect ophthalmoscopy என்ற பரிசோதனையை செய்து கண் ரத்த அளவை உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்தகைய பாதிப்பில் தற்போது ஒன்பதிற்கும் மேற்பட்ட நிலைகள் கண்டறியப் பட்டிருக்கிறது.

இதில் நீங்கள் எந்த நிலையில் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு சத்திர சிகிச்சை கூட அவசியப் படலாம். ஆனால் சத்திர சிகிச்சைக்கு பின்னரும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் மட்டும் பார்வையை மேலும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)