கஷ்டமா இருக்கு.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பிய மன்சூர் அலிகான் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

கஷ்டமா இருக்கு.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பிய மன்சூர் அலிகான் !

Subscribe Via Email

திண்டுக்கல்லில் வளைச்சு, வளைச்சு ஓட்டு கேட்டவர் மன்சூரலிகான்! இன்று காலை ஆசை ஆசையாக வந்து வாக்கு நிலவரம் கேட்டதும், ரொம்பவும் அப்செட் ஆகி திரும்பி சென்று விட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடிகர் மன்சூன் அலிகான் போட்டி யிட்டார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாடியே அந்த தொகுதிக்குள் நுழைந்து ஒத்த ஆளாக கலக்க ஆரம்பித்தவர் மன்சூரலிகான். 
திண்டுக்கல்லை விட்டு கிளம்பிய மன்சூர் அலிகான்


வித்தியாசமான நபர்.. வித்தியாசமான பிரச்சாரம்.. டீக்கடையில் டீ குடித்து கொண்டே ஓட்டு கேட்டார், தெருவில் குப்பை வாரிக் கொண்டே ஓட்டு கேட்டார்.. திடீரென கடைக்குள் நுழைந்து பஜ்ஜி, வடை சுட்டு கொடுத்து ஓட்டு கேட்டார்!

ஜவுளிக்கடை

ஜவுளிக்கடை, மளிகைகடை, பால்கடை, என ஒரு கடையும் விடாமல் ஓட்டு கேட்டார்.. கறிக்கடைக்குள் நுழைந்து மட்டனை துண்டு துண்டாக கட் பண்ணி கொண்டே ஓட்டு கேட்டார். கடைசியில் ஊசிமணி, பாசி மணி நடுரோட்டில் கடை போட்டு என கூவி விற்கும் அளவுக்கு பிரச்சாரம் களை கட்டியது. இதனால் கொஞ்ச நாளிலேயே தொகுதி மக்களின் மனதில் இவர் அசால்ட்டாக நுழைந்து விட்டார்!

பாமக வேட்பாளர்கள்

பிரச்சார நேரத்தில், அதிமுக, திமுக, பாமக வேட்பாளர்களை விட இவரது நூதன பிரசாரமே தினசரி செய்தியாக வெளிவந்தது. இணையத்திலும் படு வைரலானது. இவரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்த போது சட்டை அணியாமல் மேடையில் வந்து கலந்து கொண்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தபால் ஓட்டுகள்

இந்நிலையில், இன்று திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழக கல்லூரிக்கு அருகே மன்சூர்அலிகான் வந்தார். கூடவே கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். தபால் வாக்குப்பதிவு மற்றும் முதல் சுற்று வாக்குப்பதிவு ஆகியவற்றை பற்றி நிலவரம் கேட்டார். தனக்கு குறைவான வாக்குகளே வந்ததை அறிந்து ஷாக் ஆனார்.


4 -வது இடம்

திமுக, அதிமுக தவிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை பின்னுக்கு தள்ளி யுள்ளார் மன்சூரலிகான். மதியம் 3 மணி நிலவரப்படி 28638 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார். அத்தொகுதியில் தொடர்ந்து முதலிடத்தில் திமுக உள்ளது.

அப்செட்

இதனால் வாக்கு நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறு தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். காலையிலேயே மன்சூர் அப்செட்! மக்களை வெகுவாக ஈர்த்தவர் மன்சூர் அலிகான் என்பதை மறுக்க முடியாது என்றாலும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாரால் அறிய முடியும்!

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close