11வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - வீடியோ ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

11வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - வீடியோ !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
தூக்கத்தில் நடக்கும் வியாதி பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். பல சினிமாக்களில் இது குறித்து பார்த்திருப்பீர்கள். ஆனால் சமீபத்தில் தாய்லாந்தில் நடந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள பட்டாயாவில் ஒரு ஓட்டலில் தங்கி யிருந்த குடும்பத்தினர் இரவு நேரம் தூங்கி கொண்டிருந்த போது 5 வயது பெண் குழந்தை ஒன்று தூக்கத்தில் நடந்து அவர் தங்கி யிருந்த ரூமை விட்டு வெளியே வந்தது.


தூக்க கலக்கத்தில் நடந்து வெளியே வந்த குழந்தை பால்கனி யில் இருந்து கீழே குதித்து விட்டது. 11 மாடியில் இருந்து கீழே குதித்த குழந்தை அதிஷ்டவச மாக தப்பி விட்டது. 11வது மாடியில் இருந்து குழந்தை ஒன்று விழுந்ததை கண்டு ஓட்டல் ஊழியர்கள் வந்து குழந்தையை தூக்கினர். குழந்தைக்கு மூச்சு இருந்தது. இதை யடுத்து அருகில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். 
குழந்தை 11வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி யிருந்தது. இது எதுவுமே தெரியாமல் தூங்கி கொண்டிருந்த அவர்களது பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்களும் பதறியடித்துக் கொண்டு மருத்துவ மனைக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் குழந்தைக்கு காலில் பலத்த முறிவு மற்றும் முதுகு பகுதியில் சிறிய காயமும் இருந்தது. இது குறித்து அந்நாட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீடியோ..

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause