ஸ்டாலினை நம்ப வேண்டாம் - விஜயகாந்த் பேச்சு ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

ஸ்டாலினை நம்ப வேண்டாம் - விஜயகாந்த் பேச்சு !

Subscribe Via Email

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாததும், பொது வெளியில் பேசாததும் அக்கட்சி தொண்டா் களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ஸ்டாலினை நம்ப வேண்டாம்


இதற்கிடையே, சாத்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா, கூட்டணி கட்சி தலைவர் களை ஆதரித்து வரும் 15-ம் தேதி தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என கூறினார். இந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அவர் நடைபெற விருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர் களான அ.தி.மு.க. தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பா.ம.க. மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளி லும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

வடசென்னை தொகுதியில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, ஸ்டாலினுக்கு வாக்களிக்க வேண்டாம். அவருக்கு வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள் என தெரிவித்தார். விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர் களிடம் மிகுந்த உற்சாகத் தினை ஏற்படுத்தி உள்ளது.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close