வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியல் - இந்தியா நீக்கம்?

0
அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவுரையின் பேரில் இந்தியா விற்கும், துருக்கி யிற்கும் வழங்கப் பட்ட வர்த்தக முன்னுரிமை நிலையை அமெரிக்கா அகற்ற விரும்புகிறது என அமெரிக்க வர்த்தகத் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியல் - இந்தியா நீக்கம்?


அமெரிக்கா வும் சீனாவும் விலை உயர்ந்த வர்த்தக யுத்தத்தில் இருந்து ஒரு வெளியேற பேச்சு வார்த்தை நடத்த முயல்கின்றன. அமெரிக்கா உலகில் சில முக்கிய நட்பு நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள் ( Generalized System of Preferences - GSP) என்று பட்டியலில் வைத்து இருக்கிறது. இதில் இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், தேவையான சந்தை அணுகலை அனுமதிக்கும் என்ற உத்தர வாதங்களை இந்தியா வழங்க தவறி விட்டது என்றும் துருக்கி பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு விட்டதால் இனி அந்த நாடு தகுதி பெறாது என அமெரிக்க வர்த்தக அலுவலக பிரிதிநிதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

அமெரிக்கா வின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இருப்பதன் மூலம் இந்தியா 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியும். உலகில் GSP மூலம் அதிக பலன் பெறும் நாடு இந்தியா தான். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களு க்கும் அமெரிக்கா வில் இறக்குமதி வரி விதிக்கப் படுவதில்லை.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி யாகும் சுமார் 5 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களு க்கான வரிச் சலுகைகள் ரத்தாக கூடும். இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது மோசமாக வரி விதிப்பதே இதற்கு முக்கிய காரணம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)