ஜவ்வாது மலையில் பரட்டை தலை குவார்ட்டருடன் ஸ்கூல் ஹெச் எம் !

0
புளூ கலர் சட்டை.. பரட்டை தலை.. என கண்கள் சிவந்து போய்... பள்ளியில் சேர் ஒன்றில் தட்டு தடுமாறி நெளிந்து உட்கார்ந் திருந்தார் மனோகர்... இவர் தான் அந்த ஸ்கூல் ஹெச்.எம்! திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் நீர்தொம்பை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் படவேடு அருகே அமைந்துள்ளது.
ஸ்கூல் ஹெச் எம் - school HM


இந்த கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஜவ்வாது மலையில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளது. பல கிராமங்களில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்தான் மனோகரன்.

தினசரி பழக்கம் புளூ சட்டை

பெல் அடித்தவுடன் பிள்ளைகள் பையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடுவதுதான் முதல் வேலை என்றால், இவருக்கு கோழி பிரியாணியும், குவார்ட்டரும் தான் தினசரி பழக்கமே. 

இப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. புளூ சட்டை போட்டு கொண்டு உட்கார்ந் திருப்பது மனோகரன் தான். கிளாஸ் ரூம் எதிரிலேயே உட்கார்ந் திருக்கிறார்.

நேரம் மணி 5.10

எந்த நேரத்தில் குடித்து தொலைத்தார் என தெரிய வில்லை. அங்குள்ள கடிகாரத்தில் மணி 5.10 ஆகிறது. அப்படி என்றால் இது வேலை நேரமா என்று தெரிய வில்லை. பிள்ளைகள் அந்த சமயத்தில் எங்கே இருந்தார்கள் என்றும் தெரிய வில்லை. கிளாஸ் ரூமுக்குள் அவர்களின் புத்தகப் பைகள் உள்ளன.

பிரியாணி குவார்ட்டர், ஸ்நாக்ஸ்

அங்கிருக்கும் டேபிளில் ஒரு பாத்திரத்தில் பிரியாணி, குவார்ட்டர், ஸ்நாக்ஸ், கொஞ்சம் சாதம், குழம்பு என்று பரப்பி வைக்கப் பட்டிருக்கிறது. குவார்ட்டர் காலியாகி கிடக்கிறது. பிரியாணியை கொஞ்சம் மிச்சம் வைத்திருக் கிறார் மனோகரன்.

ஆசிரியர் யார் பொறுப்பு?

பாடம் நடத்த வேண்டிய ஆசிரியரே இப்படி இருந்தால், அந்த பள்ளி எந்த லட்சணத்தில் இருக்கும்? பள்ளி மாணவர்களின் எதிர்காலம் நாளை என்னாகும்? 


மலைவாழ் கிராம பிள்ளைகள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்தால் எந்த மாதிரியான ஒழுக்கத்தை பின்பற்றுவார்கள்? நாளை அவர்கள் பாதை தவறி போனால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? என்றெல்லாம் கிலியை ஏற்படுத்து கிறது.

கடும் நடவடிக்கை

இப்படி ஒரு வீடியோ வைரலாகி வருவதால், இதனை அடிப்படையாக வைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை ரீதியான நடவடிக்கை மட்டும் இல்லாமல் இது போன்ற ஒழுங்கீன மானவர்கள், 

தவறான முன்னுதாரண மாக விளங்கக் கூடியவர்களின் கல்வி அங்கீகார த்தையும் ரத்து செய்வதே இளம் தளிர்களின் எதிர் காலத்துக்கு நல்லதாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)