எல் நினோவால் இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும் !

0
கடந்த சில வருடங்களில் இயற்கை சீற்றங்களின் போது உச்சரிக்கப் பட்டப் பெயர் 'எல் நினோ'. பலருக்கு இந்தப் பெயர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்னால் தான் அறிமுகம் ஆகியிருக்கும். ஆனால் இதனால் ஏற்படும் விளைவு களை இந்தப் பெயரை அறிந்தி ராதவர்கள் கூட கடந்த காலங் களில் உணர்ந்திருக் கிறார்கள். 
எல் நினோ - El Nino
ஸ்பானிஷ் மொழிப் பெயரான இந்த எல் நினோவை தமிழ்நாடு வரை அறியச் செய்திருப்பதும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் தான் . இங்கே மட்டுமல்ல உலகம் முழுவதுமே அறியப்பட்ட ஒரு சொல்லாக எல் நினோ மாறிப் பல வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் பசிபிக் பெருங்கடலில் புதிதாக எல் நினோ ஒன்று உருவாகி யுள்ளது. 

அமெரிக்க அரசின் ஒரு அங்கமான தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration) இதைக் கடந்த வியாழக் கிழமை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் சில காலத்துக்கு இதன் பாதிப்பு இருக்கலாம் என எதிர் பார்க்கப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் ?


'எல் நினோ' 

பூமியை எடுத்துக் கொண்டால் பெரும் பான்மையான பகுதிகளைப் பெருங்கடல்கள் தான் சூழ்ந்திருக் கின்றன. எனவே நிலப்பரப்பில் நிலவும் வானிலை க்கும் கடல்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பெருங்கடல் களின் வெப்பநிலை எப்போதும் ஒரே போல இருப்பதில்லை. 

அவ்வப்போது மாறிக் கொண்டே கொண்டே இருக்கும். அது போல உலகில் இருக்கும் பெருங் கடல்களில் இருப்ப வற்றிலேயே பெரிதான பசிபிக்கில் ஏற்படும் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் தான் 'எல் நினோ'. இந்த மாற்றம் ஏதோ திடீரென உருவாகி விடவில்லை. 

பல வருடங்களாகப் பசிபிக் பெருங்கடலில் இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பொதுவாக இரண்டு முதல் ஏழு வருட இடை வெளிகளில் சீரற்ற சுழற்சி முறையில் இது நிகழ்கிறது. இதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முதலில் பசிபிக் பெருங்கடலில் வீசும் காற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

இயல்பான காலங்களில் பசிபிக் பெருங்கடலில் வீசும் காற்றானது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சீராக வீசிக் கொண்டிருக்கும். இந்தக் காற்றானது கடலில் இருக்கும் சூடான நீரைப் பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் மொத்தமாகச் சேர்க்கிறது. 

இந்தப் பகுதி ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா வின் வடக்கின் அருகே அமைந் திருக்கும்.  அதே நேரம் அதற்கு எதிர்ப் பக்கத்தில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் அருகே கடலின் ஆழத்தில் இருந்து குளிர்ந்த நீர் மேல் நோக்கி வரும். 
இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்
இதனால் பசிபிக் கடலின் ஒரு பக்கத்தில் வெப்பமான பகுதியும் அதற்கு எதிர் பக்கத்தில் குளிரான பகுதியும் இயல்பாகவே உருவாகும். வெப்பமான பகுதியின் பக்கமாக இருக்கும் காற்று சற்று கூடுதலாக சூடாவதால் மறுபக்கம் குளிர்ந்த பகுதியில் இருக்கும் காற்று அதைச் சமன் செய்யும். இதனால் மழைப் பொழிவும், வானிலையும் இயல்பான தாக இருக்கும்.

ஒரு சில சமயங்களில் பசிபிக் பெருங்கடலில் வீசும் காற்றின் வேகம் மெதுவாக இருந்தாலோ , அல்லது வேறு சில காரணங்களால் கடலில் ஆழமான பகுதியில் இருக்கும் குளிரான நீர் மேல் பக்கமாக வரத் தடை ஏற்பட்டாலோ எல் நினோ உருவாவதற் கான வாய்ப்புகள் அதிக மாகின்றன. 

அப்போது சூடான பகுதி ஒரு பக்கமாக மட்டும் இல்லாமல் கடலில் பூமத்திய ரேகைக்கு அருகில் பரந்துபட்டு இருக்கும். அப்போது பசிபிக் பெருங்கடல் பகுதியின் வெப்ப நிலையும் சற்று அதிகரித்துக் காணப்படும். கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தை விடவும் 5° செல்சியஸ் அளவுக்கு உயரக் கூடும். 

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த மாற்றமே எல் நினோ என அழைக்கப் படுகிறது. இதன் காரணமாக வெப்பமான இடத்தின் அருகில் காற்றானது வரும் பொழுது அதன் வழக்கமான சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. இது உலகம் முழுவதிலும் பல பகுதிகளில் ஏற்படும் வானிலை மாற்றங் களுக்குக் காரணமாக அமைகிறது.


எல் நினோவால் ஏற்படும் பாதிப்புகள்

இதனால் உலகம் எதிர் கொள்ளும் சிக்கல்களில் முக்கிய மானது கணிக்க முடியாத வானிலை தான். இந்த கால கட்டத்தில் உலகின் ஒரு பக்கம் சூறாவளியும், வெள்ளமும் ஏற்பட்டால் அதற்கு மறுபக்கம் வறட்சியும், மழைப் பொழிவு குறைந்தும் காணப்படும். மேலும் இதனால் கணிக்க முடியாத அளவுக்கு இயற்கை சீற்றங்களும், மற்ற பாதிப்புகளும் உண்டா கின்றன. 

எடுத்துக் காட்டாகக் கடந்த முறை எல் நினோ 2015-2016 ஆண்டுகளில் நிகழ்ந்தது. இதுவே இறுதியாக ஏற்பட்ட ஒன்றாகவும் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துக் காணப் பட்டது. பல இடங்களில் வரலாற்றில் இல்லதாக அளவுக்கு வெப்பநிலை பதிவு செய்யப் பட்டது. 

அதே போல உலகின் பல இடங்களில் எதிர்பாராத வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. பொதுவாக இரண்டு முதல் ஏழு வருட இடை வெளிகளில் இது உருவாகும் என்றாலும் கூட, சமீப காலமாக குறுகிய கால இடை வெளிகளில் எல் நினோ உருவாவதற் கான காரணங்களுள் உலக வெப்ப மயமாதலும் ஒன்றாகக் கருதப் படுகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் பாதிப்புகள் எப்படி இருக்கும் ?

எல் நினோவால் பெரிய அளவில் பாதிப்புக் குள்ளாகும் பகுதிகளில் இந்திய நிலப்பரப்பு முக்கிய மானது. ஏனென்றால் இதனால் இந்தியாவில் பெய்யும் பருவ மழையின் அளவில் மாற்றங்கள் இருக்கலாம். குறிப்பாகக் கோடை காலத்தின் போது பெய்யும் தென்மேற்கு பருவ மழையின் அளவு வெகுவாகக் குறையலாம். 
எல் நினோவால் ஏற்படும் பாதிப்புகள்
எனவே மக்களின் அன்றாட தேவை மற்றும் விவசாயத் திற்கான அளவே தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும். எடுத்துக் காட்டாகக் கடந்த 2015-ம் ஆண்டில் எல் நினோ பாதிப்பு இருந்தது அப்போது இந்தியா முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. 

அதே நேரம் சென்னை போன்ற இடங்களில் கடுமையான வெள்ள பாதிப்பும் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை எல் நினோவி னால் இந்தியா விற்குப் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. 


அதற்குக் காரணம் தற்பொழுது தோன்றி யிருக்கும் எல் நினோ சற்று பலவீன மானதாகவே இருக்கும் எனக் கணிக்கப் பட்டிருப்பதால் விளைவு களும் சற்று குறைவாகவே இருக்கும் என்றே எதிர் பார்க்கப் படுகிறது. 

பொதுவாக எல் நினோ தோன்றினால் அதன் பாதிப்பு குறைந்த பட்சம் ஒன்பது மாதங்கள் முதல் அதிக பட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கலாம். இந்த கால கட்டத்தில் ஒரு வேளை மழை கொட்டித் தீர்க்கக்கூடும் அல்லது கடும் வறட்சி நிலவக்கூடும். 

எதுவாக இருந்தாலும் எல் நினோவால் இந்தியாவிற்கு என்ன விதமான பாதிப்புகள் இருக்கும் என்பதை ஓரளவுக்குத் தான் கணிக்க முடியுமே தவிர உறுதியாக என்ன நடக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. ஏனென்றால் இயற்கை எப்போதும் மனிதனின் சிந்தனை களுக்கு அப்பாற்ப ட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)