சவுதியிடமிருந்து பாதுகாக்கும்படி கேட்ட சவுதிப் பெண் !

0
சவுதியில் மற்றுமொரு பெண் ஒருவர் தன் குடும்பத்தி லிருந்து தன்னைக் காக்கும்படி சமூக வலை தளங்களின் உதவியை நாடியுள்ளார். 
சவுதியிடமிருந்து பாதுகாக்கும்படி கேட்ட சவுதிப் பெண் !
இது குறித்து அரபிக் ஊடகங்கள் தரப்பில், ''நோஜத் அல் மண்டில் என்ற பெண் தனது குடும்பத்தினர் தன்னைத் துன்புறுத்துவதாக 

அவர்களைக் குடும்பத் தாரிடமிருந்து காக்கும்படி ட்விட்டர் மூலமாக உதவி கேட்டிருக்கிறார். அவர் சவுதியை விட்டு இன்னும் வெளியேற வில்லை. 

மேலும், தன்னைப் பற்றி எந்த அடையாள த்தையும் அவர் வெளியிட வில்லை. இதனை போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித் துள்ளார்'' என்று செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

நோஜத்தின் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்ட த்தைத் தொடர்ந்து அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து தரப்படும் என்று சவுதிப் பெண்கள் நல அமைப்பு தெரிவித் துள்ளது.
முன்னதாக, ரஹாஃப் மொகமது அல் குனான் (18) குவைத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி வந்தார். 

தனது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தியதாகக் கூறிய ரஹாஃப், அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்தார். 

இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ண பூமி விமான நிலையம் வந்த அவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் பயண ஆவணங்களைப் பிடுங்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப் பட்டது.
இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை குனான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹாஃப், குவைத்துக்கு என்னை நாடு கடத்துவதற்காக குவைத் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இதை நிறுத்த வேண்டும். தாய்லாந்து காவல் துறையினர் எனக்குப் புகலிடம் அளிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். 

மனிதத்தோடு எனக்கு உதவ வேண்டும் என்று ரஹாஃப் மொகமது அல்குனான் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரஹாஃப் மொகமது அல் குனானுக்கு கனடா அடைக்கலம் அளித்தது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)