இந்தியர்களை கூண்டில் அடைத்துக் கொடுமைப் படுத்திய அரபு நாட்டவர் !

0
ஐக்கிய அரபு அமீரகம் கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி இந்திய ரசிகர் களைப் பறவைகள் கூண்டில் அடைத்து கொடுமைப் படுத்திய அரபு நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 


அபுதாபியில் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி நடந்து வருகிறது. வியாழக் கிழமை நடந்த ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற் கடித்தது.

இந்தப் போட்டிக்கு முன்பாக, அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் உள்ளிட்ட சிலரை ஒரு பறவைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தும் வீடியோ வெளியானது. 

அதில், அந்த அரபு நாட்டவர், இன்று நடக்கும் கால்பந்துப் போட்டிக்கு எந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேட்கிறார். 

அதற்கு கூண்டுக்குள் இருக்கும் மக்கள், இந்திய அணிக்கு என்று தெரிவித்த வுடன் தன் கையில் இருக்கும் பிரம்பால் அடித்து, அரபு அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானது. இந்தச் செய்தியை 'கலீஜ் டைம்ஸ்' நாளேடும் வெளியிட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்து க்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.

இந்தச் சம்பவத்தை யடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை யில், “ ஆசிய நாட்டவர்கள் பலரை ஒரு அரபு நாட்டவர் பறவைக் கூண்டில் அடைத்து வைத்து கேள்வி கேட்டு அடிக்கும் வீடியோவைப் பார்த்தோம். 
கூண்டில் அடைக்கப் பட்ட அனைவரும், யுஏஇ கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தலைமை அலுவலகத் திடம் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

அந்த அரபு நாட்டவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் அனைவரும் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள், என்று நகைச் சுவைக்காக இது போல் செய்ததா கவும் தெரிவித்தார். 


ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் விதிப்படி இது சகிப்பின்மை, மரியாதையை வெளிப் படுத்துவதாக இல்லை. ஒரு போதும் பாகு பாட்டையும், வேறுபடுத்து தலையும் அரசு பொறுக்காது. அனைவரு க்கும் சமத்துவம், தகுதி ஆகிய வற்றில் அரசு நம்பிக்கை வைத்துள்ளது” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டவர்கள் பலரைக் கூண்டுக்குள் அடைத்து வைத்த அரபு நாட்டவர் கைது செய்யப் பட்டுள்ள தாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. 
இவர் மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டால், யுஏஇ சட்டப்படி, அதிக பட்சம் 10 ஆண்டுகள் சிறையும், 20 லட்சம் திர்ஹாம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மேலும்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)