தயாநிதியின் தணியாத பேராசை - சன்குழுமம் !

0
மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியை தங்கள் வியாபார விஸ்தரிப்பி ற்கும்,


பாதுக்காப்பி ற்கும் போட்டி யாளர்களை பொசுக்கு வதற்கும் தயாநிதி தயங்காமல் பயன் படுத்தினார்.

அதே சமயம் மிகப்பெரும் தொழில் அதிபர்களிடம் -அவர்களது நிறுவனங் களில்-

அண்ணன் கலாநிதியை யும் பங்குதாராக சேர்க்கும் படி பகிங்க மாகக் கேட்டார்.
ஏர்டெல் நிறுவனத்தி லிருந்து 500 செல்போன் களை இலவசமாக சன் குழுமத்திற்கு பெற்றுத் தந்தார்.

ஸடார், விஜய், ராஜ் தொலைக் காட்சிகள் கட்டண தொலைக் காட்சிகள்.

அதற்கான கட்டணங்களை எஸ்.சி.வி. வாடிக்கை யாளர்களிடம் வசூலித்த போதும் மேற்படி நிறுவனங் களுக்குத் தருவதில்லை.

எஸ்.சி.வி.யே விருப்பப்பட்டு எப்போதாகி லும் கொடுத்தால் தான் உண்டு.

அமைச்சரின் கோபத்திற்கு ஆளாவது தொழிலுக்கே ஆபத்து என அவர்களும் அடங்கிப் போனார்கள்.

மன்னராட்சி மனோபாவம் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்டு விட்டது.

கருணாநிதி யின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி இருக்க , அதற்கு தடைக் கற்களாக ஸ்டாலினும்,

அழகிரியும், கனிமொழி யும் இருப்பது தங்கள் லட்சியத்திற்கு இடையூராகக் கருதினார்கள்.

ஓரணியில் ஒன்றாக இருக்கும் ஸ்டாலினை யும், அழகிரியை யும் பிரிப்பது,


இருவரையும் ஒருவருக் கொருவர் எதிரியாய் மாற்றுவது, கருத்துக் கணிப்பின் விளைவாய்

அழகிரி ஆதரவாளர்கள் செய்யும் அராஜகங் களை அடிப்படை யாக வைத்து

அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது...... போன் றவையே மாறன் சகோதரர்களின் திட்டம்.

மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வி யின் ஏகபோகத்தை தடுத்து, சிறு கேபிள் ஆபரேட்டர் களின் தொழிலுக்கு

அரணாக அழகிரி செயல் படுவதும் மாறன் சகோதரர் களின் மட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமா யிருந்தது.
மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப் பட்டு, மூவர் உயிர் பலியான பிறகு

அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகார மையமாய் செயல் படுகிறார் என்று மீண்டும், மீண்டும் ஒலமிட்ட சன் தொலைக் காட்சியும், தினகரனும்,
இத்தனை ஆண்டுகளில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக

அழகிரி செயல்ப்பட்டு வந்த போது அதை ஒருநாளும் சுட்டிக் காட்டிய தில்லை என்பது கவனத்திற் குரியதாகும்.

அரசியலில் லாபமும், நஷ்டமும் சகஜமே ஆனால் கருணாநிதி தயவால் லாபத்தை மட்டுமே


அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், நஷ்டத்தை கண்டு கதிகலங்கி குமுறி தீர்த்தனர்.

"அழகிரியை சிறைக் குள்தள்ளாமல் நாங்கள் ஓயப்போவ தில்லை....." என மார்த் தட்டினார்கள்.

அழகிரி ஆதரவாளர்கள் செய்தது அக்கிரமாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்த்து தர்மாவேஷம்

கொள்வற்கு மாறன் சகோதரர் களுக்கு தார்மீக தகுதி இல்லாமல் போய் விட்டது.
தன்னால் உருவாக்கப் பட்டவர்கள் தன்னை கடந்து சென்று தன் மகன் அழகிரியை அழித்தொழிக்க

நினைப்பதை தனது ஆளுமைக்கு விடப்பட்ட அறை கூவலாகத் தான் கருணாநிதி எதிர்க் கொண்டார்.

பொது மக்கள் மத்தியிலேயே பட்டப் பகலில் பகிங்கரமாக தனது கட்சிக் காரர்களால் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு கொளுத்தப் பட்டதையும்,

அதில் அப்பாவிகள் மூவர் உயிரிழிந்த அவலத்தையும், அதை தடுக்கத் தவறி காவல் துறையினர்

செயலற்று வேடிக்கை பார்ததால் தன் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரையும் சி.பி.ஐ விசாரணைக்கு

ஆணையிட்ட தன் மூலம் சீர்படுத்தி விட்டதாக மக்களை நம்ப வைக்க முயற்சித்தார்.

அவர் அழகிரியை அரவணைப்ப தால் அழகிரியின் அராஜகங் களை அங்கிகரித் துள்ளதாக மக்கள் கருதினார்கள்.

துரோகம் செய்தவர் களைத் தூக்கி எறிய வேண்டும் என்ற கோப உணர்ச்சி தான் அவரிடம் மேலோங்கி நின்றது.

தன்னை தவிர தாங்கிப் பிடிக்க ஆளில்லாத தயாநிதி மாறனை அமைச்சர் பதவியி லிருந்து அகற்ற அவருக்கு சிறிதளவும் சிரமம் ஏற்பட வில்லை.

கட்சியின் அனைத்து மட்டத்தி னரிடையேயும் மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக் கிடந்தது.


அது அவர்களை, கருணாநிதியே கைவிட்ட பின்பு பொது குழுவில் பொங்கி பிரவகித்தது.

மாறன் சகோதரர் களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க திட்ட வட்டமாக தீர்மானித்தது.

மாறன் சகோதரர்களின், பேராசை பெரு நஷ்டத்தில் முடிந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)