கடலில் மீண்டும் மிதக்கப் போகிறது டைட்டானிக் !

0
அவ்வளவு எளிதில் யாரும் டைட்டானிக் கப்பலை மறந்து விட முடியாது. பிரம்மாண்டம், உற்சாகம், சோகம், கண்ணீர். அட்லாண்டிக் பெருங்கடலில்
ஏறக்குறைய நூற்றாண்டு களுக்கு முன்னால் மூழ்கிப் போன ஒரு கப்பலை இன்னும் மனிதர்கள் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். 

அக்காலத்தில் டைட்டானிக்கில் பயணிப்பது ஒரு கவுரவமான செயலாகப் பார்க்கப் பட்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்காமல் பலரும் அதற்காக ஏங்கி இருக்கிறார்கள். 

இன்று வரை ஏக்கப் பெருமூச்சு விடுவோர் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களுக் கெல்லாம் ஒரு நற்செய்தியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனம் அறிவித் திருக்கிறது. 

ஆமாம் டைட்டானிக் II கப்பலைத் தயாரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டைட்டானிக் II

இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கப்பல் நிறுவன மான Blue Star Line டைட்டானிக் II வை தயாரித்து வருகின்றது. மொத்தம் 9 அடுக்குகளில் 835 கேபின்கள் இடம் பெற்றிருக் கின்றன.
கடலில் வாழும் சிலந்தி ஆக்டோபஸ் !
மொத்தம் 2435 பயணிகள் இந்தக் கப்பலில் பயணிக்கலாம். முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு என தனித்தனியே பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பல பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு கோடிக் கணக்கில் விற்பனை யாகின்றன.
தன்னுடைய முதல் பயணத்தை துபாயில் துவங்கி நியூயார்க் செல்ல இருக்கிறது இக்கப்பல். அதிக பட்சமாக நபர் ஒன்றுக்கு 1 லட்சம் டாலர் வரை கட்டணமாக விதிக்கப் படும். 

2022 – ஆம் ஆண்டு எல்லா வேலை களையும் முடித்துத் தன் முதல் பயணத்திற்கு கப்பல் தயாராகி விடும் என அந்நிறுவனம் அறிவித்தி ருக்கிறது. 

சென்ற முறை நடந்தது போலில்லாமல் அதிகளவு பாதுகாப்பு வசதிகளை இக்கப்பலில் பயன் படுத்தப்பட இருக்கிறது. மேலும் பாதுகாப்புப் படகுகள் அதிக எண்ணி க்கையில் கப்பலில் இடம் பெறுகின்றன.
கவுரவச் சின்னம்

நியூயார்க் நகரத்தினை நோக்கி தனது பயணத்தை இங்கிலாந்தி லிருந்து துவங்கிய டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மீது மோதியதால் சேத மடைந்து கடலுக்குள் மூழ்கிப் போனது. 
நாம் அறியாத சில விசயங்கள் !
1500 பயணிகள் அந்த விபத்தினால் மரண மடைந்தனர். ஆனாலும் இன்று வரை அந்தக் கப்பலின் மீது இருக்கும் மக்களின் மோகம் குறைந்த தாகத் தெரிய வில்லை. 

உலக மெங்கிலும் டைட்டானிக் கப்பலைப் பயன்படுத்தி பல வியாபா ரங்கள் நடந்து வருகின்றன.

அறிந்து தெளிக !!

Ocean Gate என்னும் அமெரிக்க நிறுவனம் மக்களை கடலுக் கடியில் அழைத்துச் சென்று உடைந்த டைட்டானிக் கப்பலை சுற்றிக் காட்டுவ தாக அறிவித் திருக்கிறது. 
கடலில் மீண்டும் மிதக்கப் போகிறது டைட்டானிக் !
ஒரு நபருக்கு 105,129 அமெரிக்க டாலர்களை கட்டண மாக வசூலிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை அடுத்த ஆண்டு பயன் பாட்டிற்கு வருகிறது.

சீனாவின் கிஜாங் (Qijang) நதிக்கரை யில் டைட்டானிக் கப்பலின் மாதிரியை தத்ரூப மாகக் கட்டிமையைத் திருக்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பொறியா ளர்கள். 
மொசாட் போர் விமானத்தையே கடத்தும் '' - கில்லி !
இதனால் சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் இலட்சக் கணக்கில் சீனா நோக்கிப் படையெடுக் கிறார்கள். 

அந்த வகையில் 2022 – ஆம் ஆண்டு துவங்கும் இந்தக் கப்பலின் பயணத்தை இந்த உலகமே எதிர் பார்த்து நிற்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)