அரிதான வெள்ளை கலைமான் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

அரிதான வெள்ளை கலைமான் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
மிகவும் அரிதான வெள்ளை கலைமான் கன்று ஒன்றின் அழகிய புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன.


மிகவும் அரிதான வெள்ளை கலைமான் கன்று ஒன்று நார்வே நாட்டில் சமீபத்தில் தென் பட்டுள்ளது. 

ஒரு புகைப்படக் கலைஞர் அந்த மானை புகைப் படங்கள் எடுத்த போது அந்த மான் அமைதி யாக நின்றுள்ளது. 

இப்போது அந்த புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

நார்வே நாட்டின் ஒஸ்லோ (Oslo) நகரத்தைச் சேர்ந்த மேட்ஸ் நார்ட்ஸ்வீன் (Mads Nordsveen) என்ற 24 வயது புகைப்படக் கலைஞர், 

நார்வேயில் உள்ள செஞ்சா (Senja) தீவில் அவரது நண்பர் களுடன் நடை பயணம் 

மேற்கொண்ட போது தென்பட்ட அரிதான வெள்ளை நிற கலைமானை புகைப்படம் எடுத்துள்ளார்.
வெள்ளை கலைமான் களின் மரபணுக் களில் ஏற்படும் திடீர் மாற்றம் தான் அவற்றின் இந்த வெள்ளை நிறத்திற்குக் காரணம்.
இது குறித்து அவர், “அந்த மான் பனியின் நிறத்தில் பனியோடு கலந்து இருந்தது. 


அது ஒரு சிறந்த தருணம். நாங்கள் அதனைக் கண்டு ஸ்தம்பித்து விட்டோம். 

புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற என் உள்ளுணர்வு எனக்குத் தோன்றவே சில நொடிகள் ஆனது என்று கூறி யுள்ளார். 

மேலும் அதன் கண்கள், கொம்புகள் இல்லை யென்றால் அது ஒரு பனி மேடு என்றே நினைத்தி ருப்போம்.

முதலில் அந்த மான் பதற்றமாகத் தென் பட்டாலும் நாங்கள் அனைவரும் அமைதி யாக அமர்ந்த பின்பு அதுவும் அமைதியாக இருந்தது. 

அதன் பின்பு எடுத்த புகைப் படங்களு க்குக் கூட அமைதியாக நின்றது. 

பழுப்பு நிறத்தில் அதன் தாய் மான் கொஞ்சம் தொலைவில் நின்று கொண்டிருந்த நிலையில் 

சில நிமிடங் களுக்கு பின் அது அதன் தாயுடன் சேர்ந்து காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டது” என்று கூறி யுள்ளார்.


மேலும் எடுத்த புகைப் படங்களை அவர் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்தும் உள்ளார். 

இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத் துள்ளது. 

இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு வெள்ளை மான் ஒன்று வடக்கு ஸ்வீடனில் உள்ள ஒரு சாலையில் தென் பட்டுள்ளது. 

அதன் பிறகு இப்போது தான் தென் பட்டுள்ளது.

வெள்ளை நிற கலைமான் களின் மரபணுக் களில் ஏற்படும் திடீர் மாற்றம் (Genetic mutation) தான் 

அவற்றின் இந்த வெள்ளை நிறத்திற்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது. 


வடக்கு ஐரோப்பாவை சேர்ந்த மக்களை பொறுத்த வகையில் இது போன்ற வெள்ளை மிருகங்கள் தென்படுவது மிகவும் அரிது. 

மேலும் வெள்ளை கலைமான் இனம் தனித் தன்மை வாய்ந்தது. 

அதோடு அவை மகிழ்ச்சியின் அடையாளம் என்றும் அவர்கள் நம்பு கின்றனர்.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close