வெற்றிக்குத் தேவை வேகமும், விவேகமும் !

0
இன்றைய காலகட்டத்தில் போட்டிகள் நிறைந்த சமுதாயத்தில் இளைஞர்களின் வெற்றிக்குத் தேவை வேகமும் விவேகமும் மட்டுமே ஆகும்.
வெற்றிக்குத் தேவை வேகமும், விவேகமும் !
தன்னம்பிக்கையின் தனித்த அடையாளமாகத் திகழும் விவேகானந்தர் குறிக்கோளை அடையும் வரைப் போராடி வெற்றி பெற வேண்டும் என்கிறார். 

வெற்றிப் பாதையில் செல்வோரு க்குத் தன்னம் பிக்கையே துணை புரியும். இன்றைய இளைஞர்களிடத்தில் எல்லா ஆற்றலும் நிறைந்துள்ளன. 

எனினும், அந்த ஆற்றல் களைக் கையாளும் திறமை இல்லாமல் இருக்கின்றனர்.

நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக ஒரு நிலைப்பட்ட மனதுடன் எண்ணும் போது வெற்றி நிச்சயப்படுகிறது. அவ்வாறான வெற்றி கிடைப்பதற்குச் சில காரணிகள் இன்றியமையாத தாகின்றன.
அவை, உயர்ந்த குறிக்கோள். நாம் வெற்றிபெறக் குறிக்கோள் மட்டும் போதாது. அக்குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

எச்செயலும் நம்மால் முடியுமா? என்று குழம்புவதை விட நம்மால் முடியும் என உறுதி கொள்வது உயர்ந்த குறிக்கோளின் முதற் படியாகும். நம்முன்னோர் கள் உயர்ந்த குறிக்கோள் களைக் கொண்டிருந்தனர். 

இந்த வாழ்வை இல்லறம் என்றனர். இல்லறத்தில் வாழ்பவன் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்பதற்காக ‘இல்லறம்’ என்றனர். போர்க் களத்தில் கூட அறத்தைக் கடை பிடித்தனர்.

பகைவனிடத்தில் போர் செய்யும் போது கூட நேர்மையையும் பல விதிமுறைகளையும் பின்பற்றிப் பல உயர்ந்த குறிக்கோள்களுடன் வாழ்ந்தனர்.

அதனால் தான் உலகம் போற்றும் பண்பாட்டை நாம் கொண்டுள்ளோம். எனவே நம் குறிக்கோள் உயர்ந்ததாக அமையும் போது வெற்றி கைவசமாகும்.
ஒருமையுள் ஆமை போல்
ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

என்கிறார் வள்ளுவர். மனக்கட்டுப்பாடு என்பது ஒரு கலை. உறுதியுடன் நாம் நம் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயமே.

இந்த உலகம் ஒரு நாடகமேடை அதில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்கிறார் ஷேக்ஸ்பியர். நாம் இந்த உலகத்தை ஒரு போர்க்கள மாகப் பார்த்தல் வேண்டும்.

ஆம், நன்மை, தீமை ஆகிய இரண்டிற்கும் உரிய போர்க்களம். இந்தப் போர்க்களத்தில் தீமையை வெற்றி கொண்டு நன்மையை மட்டும் கடை பிடிக்க வேண்டும்.
எனவே தீமையை வெல்வதற்கும், நன்மையைக் கடை பிடிப்பதற்கும் மனக் கட்டுப்பாடு என்னும் மகாசக்தி மிக அவசிய மானதாகும். 

இடை விடாத பழக்கம், கடுமையான உழைப்பு இவற்றால் மனதை ஒரு முகப்படுத்தும் சக்தியைப் பெறலாம்.
வெற்றிக்குத் தேவை வேகமும், விவேகமும் !
பிறகு எச்செயலைச் செய்தாலும் திறமையோடு செய்ய இயலும். எத்துறையிலும் சிறப்பாகச் செயலாற்ற முடியும். 

நாம் முதலில் நம்மீது நம்பிக்கை உடையவர்களாய் இருத்தல் வேண்டும், இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்கிறார் திருநாவுக்கரசர். 
தாய்மார்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்க !
நமக்குரிய கடமைகளைத் தன்னம் பிக்கையோடு சரிவரச் செய்வதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. 

உரிய கடமைகளைச் செய்த பின்பு வரக்கூடிய விளைவுகளுக்காக கவலை கொள்ளுதல் கூடாது. செய்வதைத் திருந்தச் செய்தாலே வெற்றியாகும்.

எதையும் எண்ணிக் கவலை கொள்வதால் எச்செயலும் மாறிவிடப் போவதில்லை. நான் எனது முழுத்திறனோடு செயலாற்றுகிறேன். 

பின்விளைவு களுக்காக கவலைப் படுவதில்லை என்று தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் இன்றைய இளைஞர்கள் எச்சூழலிலும் தோல்வி யடையாமல் வெற்றி யடையலாம்.

முதலில் தன்னை நம்புதல் வேண்டும். தன்னைத் தானே நம்பினால் பின் ஊர் உன்னை நம்பும் என்பது இயல்பே. 

திறமைகள் அனைவரிடத் திலும் ஒளிந்திரு க்கின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி முன்னேறும் அறிவு ஒரு சிலரிடமே இருக்கிறது. 

மனதில் பயம் ஏற்படும் போது தாழ்வு மனப்பான்மை தலை தூக்குகிறது. நுட்பமான அறிவுத் திறன் கொண்டு தாழ்வு மனப்பான்மையை நீக்குதல் வேண்டும்.

இன்று இளைஞர்க ளிடத்தில் வெளிநாகரிக மோகம் அதிகரிக்க காரணம் தாழ்வுமனப் பான்மையே ஆகும்.

நம் நாகரிகம் பெரிது எனவும், நம்மொழி, நம் உணவு, நம் நாடு, நம் ஊர் பெரிது எனவும் எண்ணம் வளரும் போது தான் நம் மீது நமக்கு உயர்வான எண்ணம் வளரும்.
இனி உலகில் கொசு என்ற உயிரினமே இருக்காது 
அவ்வாறு ‘நாம் உயர்வு’ என்ற எண்ணம் வளருமானால் நம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை அகன்று வெற்றிக்கு வழிவகுக்கும்.
வெற்றிக்குத் தேவை வேகமும், விவேகமும் !
விழிப்புணர் வின் வழி காட்டியாக அமைவது நுண்ணறிவு திறனாகும். எச்செயலை யும் நுட்பமான அறிவுடன் செய்தாலே வெற்றி நிச்சயம். 

பல கலைகளை அறிந்திருந் தாலும் நம்மால் எதில் வெல்ல இயலும்? என்று கண்டறிதலே நுட்பமான அறிவாகும்.
22 ஆண்டுகள் காட்டில் வசிக்கும் விசித்திர மனிதன் !
எத்துறையில் நாம் வெல்ல இயலும் என்று கண்டறிந்து அத்துறை எதுவோ? அதில் முழு ஈடுபாட்டுடன் மனம்ஒன்றி செயல்பட்டால் வாழ்வில் உயரலாம். 

வில்லில் இருந்து புறப்படாத எந்த அம்பும் இலக்கை அடையாது என்பார்கள். அதற்கு ஏற்றார் போல இளைஞர்கள் விழிப்புணர்வு கொண்டு வில்லில் இருந்து புறப்படும் அம்புகளாகச் செயல்பட வேண்டும்.

இளைஞர்களே... ஒவ்வொரு மனிதனிடமும் தனித்துவ மிக்கத் தலைமைப் பண்பு என்பது இயற்கை யாகவே அமைந்துள்ளது. 

அர்த்தமற்ற பயமும், அவநம்பிக்கை யும், தாழ்வு மனப் பான்மையும் பலரையும் அடிமைகளாய் வைத்திருக்கின்றன.
நாசா செல்லும் மதுரை டீக்கடைகாரர் மகள் !
எனவே, குறிக்கோளுடன் திட்டமிடுங்கள், பொறுமையுடன் செயல் படுங்கள், நேர்வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள். இவையே வெற்றியின் மூல மந்திரங்கள் ஆகும்.

முனைவர் இரா.கீதா, பேராசிரியர், தனியார் கல்லூரி, காரைக்குடி.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !