இந்தியாவில் மூடப்பட இருக்கும் ATM மையங்கள் !

0
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி இந்தியா முழுவதும் சுமார் 2.38 லட்சம் ATM இயந்திரங்கள் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. 


அதில் பாதியளவு இயந்திரங் களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட 

இருப்பதாக அகில இந்திய ஏ.டி.எம் தயாரிப்பு குழுமம் (CATMI) அறிவித் துள்ளது. 

பழைய இயந்திரங் களில் பராமரிப்பு செலவுகள் கட்டுப் படுத்த முடியாத அளவு 

உயர்ந் துள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித் துள்ளது. 

இவ்வாறு மூடப்பட இருக்கும் பெரும்பாலான இயந்திர ங்கள் கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவை யாகும்.

எதற்காக ?

இந்தியா முழுவதும் உள்ள 1.13 லட்சம் ATM இயந்திரங்கள் மூடப்பட இருக்கின்றன. 

பண மதிப்பிழப்பு நடவடி க்கையைத் தொடர்ந்து அப்பகுதி களில் இருந்த இயந்திரங்கள் மோசமாக பாதிக்கப் பட்டிருப்ப தாகவும் 


அதனைப் பராமரிக்க ஒதுக்கப்படும் நிதியை விட செலவினங்கள் அதிகரித்து இருப்ப தாகவும் நிறுவனம் தெரிவித் துள்ளது.

மென்பொருள் நிறுவுதல் மற்றும் பழுதடைந்த வன்பொருள் பாகங்களைச் 

சரி செய்ய ஆகும் செலவு கடந்த இரண்டாண் டுகளில் கடும் உயர்வினைச் சந்தித்துள்ளது. 

மேலும் இயந்திரங் களில் பணத்தினை நிரப்பவும், புது பணத்தின் அளவிற்கு 

ஏற்ற மாறுதல் களைச் செய்ய முடியாத அளவிற்கு அவை சேதமடைந் துள்ளன. 

இந்த நிலைக்குக் காரணம் குறுகிய காலத்திற்குள் அதிகப் படியான பயன்பாட்டினை இயந்திர ங்கள் சந்தித்ததே ஆகும்.

யாருக்கு பாதிப்பு அதிகம் ?

நீக்கப்பட இருக்கும் 1.13 லட்சம் இயந்திரங் களில் எத்தனை இன்றும் மக்களின் தேவைக்கு 

பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக் கின்றன? என்ற விபரங்கள் எதனையும் அந்நிறுவனம் வெளியிட வில்லை. 

எனில் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் தேவைகளை 

அந்தந்த பகுதியி லிருக்கும் வங்கிகளின் மூலமே பூர்த்தி செய்து கொள்ள முடியும்.


இந்தத் திட்டம் அமுல் படுத்தப்படுமே யானால் சிறு/குறு மற்றும் குடிசைத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப் படும். 

மேலும் மக்களிடம் பணப் புழக்கம் குறைவது பொருளாதாரச் சிக்கல்களை தருவிக்கும். 

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைப் பொறுத்த வரை தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும். 

இது குறித்து மத்திய அரசிடம் இருந்தோ, ரிசர்வ் வங்கியிடம் இருந்தோ இதுவரை எந்தத் தகவலும் வெளியாக வில்லை. 

இதற்கான மாற்று வழிகளை கொண்டு வராவிடில் இந்திய வர்த்தகம் மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பது மட்டும் உண்மை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)