ரூ. 20 கோடிக்கு ஏலம் விடப்பட்ட ஐன்ஸ்டீனின் கடிதம் !

0
இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று கிறிஸ்டிஸ் ஏல மையத்தில் 2.89 மில்லியன் அமெரிக்க டாலர்களு க்கு (ரூ. 20 கோடி) ஏலம் போயுள்ளது.
ரூ. 20 கோடிக்கு ஏலம் விடப்பட்ட ஐன்ஸ்டீனின் கடிதம் !
இந்த கடிதம் எதிர்ப் பார்த்ததை விட இருமடங்கு வரை ஏலம் போனதாக கிறிஸ்டிஸ் ஏல மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 3, 1954 தேதியிட்ட இரண்டு பக்க கடிதத்தை ஜேர்மன் மெய்யிய லாளர் எரிக் குட்கின் என்பவருக்கு ஐன்ஸ்டீன் எழுதினார். 

அறிவியலு க்கும், மதத்துக்கும் இடையேயான விவாதத்தின் முக்கிய சாட்சியமாக இந்த கடிதம் பார்க்கப் படுவதால் இக்கடிதம் 'கடவுள் கடிதம்' (God Letter) என்று அழைக்கப் படுகிறது.

இந்த கடிதத்தில், இறை நம்பிக்கை குறித்து, 'இறைவன் என்ற வார்த்தை எனக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், மனித பலவீனத்தின் வெளிப்பாடு அது,' என்று விவரித்து உள்ளார் ஐன்ஸ்டீன்.
மேலும் அவர், 'பைபிள் மரியாதைக் குரிய விஷயங் களின் தொகுப்பு தான். ஆனால், அதுவும் ஒரு மற்றொரு புனைவு தான்' என்கிறார் ஐன்ஸ்டீன்.

'எப்படி விளக்கம் கூறினாலும், அது எவ்வளவு நுட்பமாக இருந்தாலும், இதில் எதையும் மாற்ற முடியாது,' என்று அந்த கடிதத்தில் விவரித்துள்ளார் அவர்.

அவர் தாம் சார்ந்திருந்த யூத மதத்தை பற்றி குறிப்பிடுகை யில், 'மற்ற மதங்களை போல இதுவும் பழங்கால மூட நம்பிக்கையின் அவதாரம்,' என்று குறிப்பிட் டுள்ளார்.

'நான் சார்ந்த யூத இனமக்களின் மனதில் நங்கூர மிட்டிருந்தா லும், அவர்களும் சரி ஏனைய இனங்களும் சரி அவர்கள் என் மீது கொண்ட பார்வையும் மரியாதையும் 
ஒரே மாதிரி தான் இருக்கின்றது' என்றும் அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.ஐன்ஸ்டீனின் கடிதம் ஏலத்தில் விடப்படுவது இது முதல் முறையல்ல. 

ஏற்கனவே, மின்னியல் கோட்பாடு மற்றும் சிறப்பு சார்பியல் கோட்பாடு குறித்து அவர் எழுதிய கடிதம் ரூ. 35 லட்சத்திற்கு விற்பனை ஆகி இருக்கிறது.

மேலும், கடந்த 2017ம் ஆண்டு, மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பது குறித்த ஐன்ஸ்டீனின் கடிதம் 1.56 மில்லியன் டாலர்களுக்கு ஜெரூசலேத்தில் விற்பனை ஆனது.

செட்டிநாடு மிளகாய் சட்னி செய்வது எப்படி?

அந்த கடிதத்தில், 'வெற்றிகளின் பின்னால் ஓடுவதை விட, அமைதியான, அடக்கமான வாழ்க்கையே பெரும் மகிழ்ச்சியை கொண்டு வரும்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)