நீரிழிவு நோயின் அறிகுறிகள் !

நாம் உயிர் வாழ்வதற்கும் தொழிற்படுவதற்கும் எமக்கு சக்தி தேவை. இச்சக்தி பிரதானமாக நாம் சாப்பிடும் 
மாப்பொருள் சமிபாடு அடைந்து உருவாகும் குளுக்கோஸில் இருந்து பெறப் படுகின்றது. இந்த குளுக்கோஸ் எமது இரத்தத்தில் ஒரு சீரான மட்டத்தில் பேணப்படும். குளுக்கோஸை எமது உயிர்க் கலங்கள் 


பயன்படுத்து வதில் பாதிப்பு ஏற்படும் போது இரத்தத்தில் குளுக்கோஸின் மட்டம் சாதாரண அளவை விட அதிகரிக்கும். இந்நிலைமை நீரிழிவு என்று அழைக்கப்படுகின்றது.

நோயின் அறிகுறிகள்

அதிகளவில் சிறுநீர் (சலம்) கழித்தல்.

அதிகரித்த தாகம்.

அதிகரித்த பசி.

திடீரென உடல் மெலிதல் அல்லது நிறை அதிகரித்தல்.

கண்பார்வை மங்குதல்.

அவயவங்களில் விறைப்புத் தன்மை ஏற்படல்.

நாட்பட்ட மாறாத புண்கள்.

பின் கழுத்திலும் உடலின் பின் பகுதியிலும் பருக்களும் கட்டிகளும் தோன்றுதல். பெரும்பான்மை யானவர்களில் இப்படியான அறிகுறிகள் ஆரம்பத்தில் தென்படுவ தில்லை. 

வேறு நோய்களுக் காக சிகிச்சை பெறச் செல்லும் போது நீரிழிவு கண்டு பிடிக்கப் படுகின்றது. எனவே 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருட மொருமுறை இரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பது சிறந்தது.

பின்வருவோர் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும்.

பருமன் கூடியவர்கள். அளவிற்கதிக மாகவும் அடிக்கடியும் உணவு உண்ணும் பழக்கம் உடையவர்கள்.


இரத்த உறவினர் களுக்கு நீரிழிவு இருப்பவர்கள்.

அதிகளவில் மதுபானம் அருந்துபவர்கள்.

கர்ப்பவதிகள்.

நீரிழிவு என்றால் என்ன? 

நீரிழிவு நோயின் அறிகுறிகள் !

நீரழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் (Complications) !

நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு? 

Tags: