இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் !

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் !

0
இங்கு இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மிகவும் குறைகின்றது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும். 
இதன் போது குளுக்கோஸின் அளவு 55 மில்லிகராம் அல்லது 3 மில்லிமூல் / லிட்டர் ஐ விடக் குறையும் போது இதற்கான அறிகுறிகள் தென்படும்.  இது நீழிரிவு நோயாளியை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்.


இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம்

உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல்.

உரிய அளவில் மாத்திரைகளை உட்கொள்ளாமல் விடல் அல்லது இன்சுலின் கூடிய அளவில் ஏற்றுதல்.

மதுபானம் அருந்துதல்.

அறிகுறிகள்:

அதிகளவு வியர்த்தல்

நடுக்கம்

பார்வை மங்குதல்

படபடப்பு

மாறாட்டம்

மயக்க நிலை

பசி என்பன ஏற்படும்.

இந்நிலைமையின் போது இரண்டு தேக்கரண்டி சீனியை அல்லது குளுக்கோஸ் உட்கொள்ளலாம்.

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதை தடுப்பதற்கான வழிகள்:

உணவுகளை சரியான அளவில் சரியான நேரத்தில் உட்கொள்ளல்.

மாத்திரைகளை வைத்தியரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும்

அடிக்கடி இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைப் பரிசோதனை செய்து சரியான அளi உறுதி செய்தல்.


எப்போதும் ஏதாவது இனிப்பு வகைகளை வைத்திருக்கவும். விரதம் இருத்தலை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளவும். தவிர்க்க முடியாமல் போனால் 

உங்கள் வைத்தியருடன் கலந்துரையாடி விரதத்தின் போது எவ்வாறு மாத்திரை களை மாற்றம் செய்யலாம் என அறிந்து கொள்ளுங்கள். மதுபானம் அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.

நீரிழிவு என்றால் என்ன? 

நீரிழிவு நோயின் அறிகுறிகள் !


நீரழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் (Complications) !

நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு? 

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ! 

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க ! 

இன்சுலின் மருந்து போடுவது எப்படி? 

இன்சுலின் போடும் முன் கவனிக்க வேண்டியவை !

பார்வையைப் பறிக்கும் நீரிழிவு ! 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)