பல்லியுடன் தொடர்புடைய மூட நம்பிக்கைகள் !

0
இந்தியாவில் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் பல்லிகளை தங்கத்தாலும், 


வெள்ளியாலும் செய்து அதனைத் தொட்டு வணங்கி வருகின்றனர்.

இதனால் எல்லா வகையான பாவங்களும், உடல் நோய்களும் நீங்குவதாக ஐதீகம். 

மேலும் பல்லி எம்மீது வீழ்ந்தால் அதற்குப் பலன் சொல்லும் ஜோசியர்களும் இருக்கின்றார்கள். 

வலது பக்கம் விழுந்தால் நல்லது நடக்கும், இடது பக்கம் விழுந்தால் கெட்டது நடக்கும்

அதே போன்று பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், 
மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் இருக்கின்றது என்றெல்லாம் கூறி மக்களை ஏமாற்றும் பல்லி ஜோதிடர் களும் இருக்கின்றனர்.


நாம் ஒருவிடயத்தைச் சொல்லும் போது பல்லி கத்தினால் உடனே “பாருங்கள் இதற்கு பல்லியும் சாட்சி சொல்கிறது” என்றும்

சொல்வது பலிக்கும் என்றும் நம்புபவர்கள் எம்மிலும் இருக்கின்றனர்.

இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகள் என்பதை மறந்து விடக்கூடாது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)