சன்னிதானத்தில் பெண்கள் நுழைந்தால் மூடுமாறு பந்தளம் அரச குடும்பம் உத்தரவு !

0
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழி படுவதற்காகச் செய்தியாளர் கவிதா உட்பட இளம் பெண்கள் இருவர் சென்றுள்ள நிலையில் 
அவர்களைக் கோவிலுக்குள் நுழைய விடாமல் ஏராளமான பக்தர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர்.


சபரி மலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்தத் தீர்ப்பை இந்து இயக்கங்களைச் சேர்ந்த வர்களும், ஐயப்ப பக்தர்களும் எதிர்த்து வருகின்றனர். 

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர் கவிதா சக்கல், சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா ஆகிய 

இருவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழி படுவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.

காவல் துறையினரின் பாதுகாப்புடன் அவர்கள் கோவிலின் அருகே நடைப்பந்தல் என்னு மிடத்தைச் சென்றடைந்தனர். 

இந்நிலையில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஐயப்ப பக்தர்களும் கோவிலைச் சூழ்ந்து கொண்டு 

இளம் பெண்களைக் கோவிலுக்குள் நுழைய விடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஐயப்பன் கோவிலுக்கு உரிமையுள்ள பந்தளம் அரச குடும்பத்தினர், 

பெண்களை உள்ளே நுழைய முயன்றால் கோவிலைப் பூட்டும்படி பூசாரிகளுக்கு உத்தர விட்டுள்ளனர். 

வழிபாடு நடத்த வந்துள்ள பெண்களைப் பக்தர்கள் தாக்கிவிடக் கூடாது 

என்பதற்காக ஐஜி ஸ்ரீஜித் தலைமையில் காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டுள்ளனர்.

பக்தர்கள் முற்றுகையையும் தாண்டி காவல் துறையினர் பாதுகாப்புடன் பெண்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று விடக் கூடாது


என்பதற்காகப் பக்தர்களும் பூசாரிகளும் பதினெட்டுப் படிகளின் கீழ்ப் பகுதியில் அமர்ந்து ஐயப்பன் பாடல்களைப் பாடிப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தி யாளர்களிடம் பேசிய, கேரள மாநிலக் கோவில்கள் வாரியத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்,

திறமையையும் பலத்தையும் காட்ட வேண்டிய இடமாகக் கோவிலைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பெண்ணுரிமை ஆர்வலர் களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பக்தர்களின் உரிமைகளைக் காக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)