'ரெட் அலர்ட்' அப்டின்னா என்னங்க தெரியுமா? உங்களுக்கு !

0
தமிழகத்திற்கு வரும் 8ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கேரள மழை வெள்ளத்தின் போது ரெட் அலர்ட் என்ற வார்த்தை பரவலாக பயன் படுத்தப் பட்டது. 

அதன் பிறகு, கடந்த சில தினங்க ளுக்கு முன்னர், மீண்டும் கேரளாவை சேர்ந்த 3 மாவட்டங் களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். 

இந்நிலையில், தற்பொழுது, தமிழகத் தில் வரும் 7ம் தேதி அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், 


மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கை களை மேற் கொள்ள

வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

தற்பொழுது வானிலை மையங்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை  “ரெட் அலர்ட்” அப்படின்னா என்ன பார்க்கலாம் வாங்க.

அடுத்த 5 நாட்களில் வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல்

அறியும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். 

அந்த எச்சரிக்கை யானது பச்சை எச்சரிக்கை (Green Alert ), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), 

ஆம்பர் எச்சரிக்கை ( Amber Alert) மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) என மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப் படுகிறது.

பச்சை எச்சரிக்கை கொடுக்கப்  பட்டால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. 

ஏனெனில், மழை பொழிவதற் கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடுக்கப் படுகிறது.

மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப் படுகிறது. 

மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் பட்சத்தில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப் படுகிறது. 

அப்பொழுது, பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். 


அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமை களை பார்த்துக் கொள்ள தேவையான

முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்கு வரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கை யினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 

வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கை யாகவே ரெட் அலர்ட் பார்க்கப் படுகிறது.
எனவே ரெட் அலர்ட் பற்றி தெரிந்து கொண்டு தகுந்த முன்னெச்சரிக் கையுடன் மக்கள் இருக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)