ஸ்டாலினின் தனித்த அரசியல் போராட்டம் துவங்கியது !

0
தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை இழந்து இருக்கும் திமுக செயல் தலைவர் 
ஸ்டாலினின் அரசியல் போராட்டம் தற்போது தான் உண்மையாக தொடங்கி இருக்கிறது. 

திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். தற்போது அவரது இறுதி சடங்கு பணிகள் நடந்து வருகிறது. 

உலகம் முழுக்க தலைவர்கள் அவருக்காக கண்ணீர் விட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் அண்ணா சமாதிக்கு பின் கருணாநிதியை அடக்கம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது. 

இந்த பிரச்சனை தான் ஸ்டாலின் கருணாநிதி இல்லாமல் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை ஆகும்.

சிறு வயதில் போராட்டம்


ஸ்டாலினின் அரசியல் போராட்டம் இப்போது தொடங்கியது கிடையாது. சிறு வயதிலேயே 

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பல போராட்டங் களில் ஈடுபட்டு இருக்கிறார் அவர். 

மீசாவின் போதே சிறை சென்று கஷ்டப்பட்டு இருக்கிறார். வரிசையாக பல முறை போராட்டம் செய்து சிறைக்கு சென்று இருக்கிறார். 

இதெல்லாம் கட்சியில் பெரிய நபராக ஆகும் முன் செய்த போராட்டம் ஆகும்.

செயல் தலைவர் ஆன பின் போராட்டம்

அதற்கு அடுத்து தான் ஸ்டாலினின் மிக முக்கியமான அரசியல் போராட்டம் துவங்கியது. 
திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் ஆயிரத்திற்கும் அதிகமான போராட்டம் நடத்தினார். 

மோடி தொடங்கி ஆளுநர் வரை அனைவருக்கும் கருப்பு கொடி காட்டினார்.

உலக அளவில் கருப்பு கொடி காட்டி ஒரே நாளில் டிரெண்ட் ஆனார். இது தான் இதுவரை இவர் செய்த பெரிய அரசியல் போராட்டங்கள்.

உண்மையான போராட்டம்

துவங்கியது ஆனால் இப்போது அரசியலில் ஸ்டாலின் பெரிய அளவில் தனித்து விடப்பட்ட இருக்கிறார். 

திமுகவில் பெரிய தலைவர்களாக இருந்தவர்கள் வயது முதிர்வில் அவதிப்பட்டு வருகிறார்கள். இளைஞர் படையையும், 


சில முக்கிய தலைகளின் உதவியுடனும் அவர் கட்சியை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். 

இனி வரும் காலத்தில், தனித்த அரசியல் தலைவராக, கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின் கட்சியை நடத்த வேண்டி இருக்கும்.

முதல் போராட்டம்

ஸ்டாலினின் முதல் போராட்டமே கருணாநிதிக்காக என்பதுதான் இதில் சோகமான விஷயம். 

என்ன நடந்தாலும் திமுக தலைவரை மெரினாவில் தான் புதைப்பேன் என்று இன்று காலை ஸ்டாலின் உறுதியாக இருந்தார். 
இந்த போராட்ட குணம் தான் திமுகவின் ஆணி வேர். அதை தற்போது ஸ்டாலின் உணர்ந்து இருக்கிறார். 

30 வருடத்திற்கும் மேலான ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் இது தான் இரண்டாவது அத்தியாயம். 

அப்பாவிற்காக போராடியது தான் அதன் தொடக்கம் என்று வரலாறு பேசும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)