ஒளிந்தவர்களை இழுத்து வைச்சு சுட்டார்கள்... சொல்லும் சாட்சிகள் !

0
ஸ்டெர் லைட்டுக்கு எதிரான தீவிர மக்கள் போராட்டம் நேற்றோடு 100-வது நாளை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அமைதியாகத் தொடங்கிய போராட்டம் வன்முறையில் முடிந்திருக்கிறது.
ஒளிந்தவர்களை இழுத்து வைச்சு சுட்டார்கள்... சொல்லும் சாட்சிகள் !
99 நாள்களாக வெவ்வேறு பகுதிகளில் அமைதியாக நடந்து வந்த போராட்டம் நேற்று மட்டும் வன் முறையாக மாறியதன் பின்னணி என்ன?

இதற்கு முன்பு மார்ச் 24-ம் தேதி மிகப்பெரிய மக்கள் திரள் திரண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாடு நடந்தது. அதன் பிறகு ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவல த்துக்குச் சென்று மனு கொடுக்கவும் செய்திருக் கின்றனர். 

அப்புறம் ஏன் இந்த 144 தடை உத்தரவு, ஏன் இந்த துப்பாக்கிச் சூடு?? களத்தில் இருந்த வர்களிடம் பேசியதில் இருந்து பல உண்மைகள் தெரிய வந்தன.

காலை 9 மணிக்கு மேல் தூத்துக் குடியின் பனிமய மாதா கோயிலில் இருந்து ஊர்வல மாக புறப்படத் துவங்கினர் பொதுமக்கள். (போராட்டக் காரர்கள் என்று தனியே யாருமில்லை. 

இங்கே பொது மக்கள் தானே போராட்டக் காரர்கள்!). தூத்துக்குடி நகரத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிணையத் தொடங்கினர். 
தூத்துக் குடியின் மையப் பகுதியை அடைந்த பொழுது ஏழாயிரம் பேருக்கு மேல் திரண்டிருந்தனர். காலையிலிருந்தே தூத்துக்குடி முழுவதும் மருந்தகங் களைத் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. 

ஸ்டெர் லைட்டுக்கு எதிரான ஆக்ரோஷ மான முழக்கங் களுடன் ஊர்வலம் சிதறாமல் சென்றிருக்கிறது. அதுவரை மிக அமைதியாக நடந்த ஊர்வல த்துக்கு தூத்துக்குடி விவிடி சிக்னலில் முட்டுக் கட்டைப் போட்டனர் 

காவல் துறையினர். பேரிகாட்கள் அமைத்து இதற்கு மேல் போகக்கூடாது என எச்சரித் துள்ளனர். காவல் துறையினரின் பேச்சு வார்த்தைக்கு பொதுமக்கள் உடன்பட வில்லை. 

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிடாமல் கலையப் போவதில்லை எனக் கூடியிருந்த மக்கள் சொல்ல, அவர்கள் மீது தடியடி கட்ட விழ்க்கப் பட்டது. 
ஒளிந்தவர்களை இழுத்து வைச்சு சுட்டார்கள்... சொல்லும் சாட்சிகள் !
அங்கேயே பொது மக்கள் சிலருக்கு மண்டை உடைந்தது; பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்ள திருப்பித் தாக்க ஆரம்பித்த பொது மக்கள் போலீஸாரை விரட்டி யடித்தனர். 

அதன் பின் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்த பொது மக்களை 3-வது மைல் மேம்பாலத்தில் தடுத்து நிறுத்தித் தாக்க ஆரம்பித்தது காவல் துறை. 

இம்முறை கண்ணீர் புகைக் குண்டுகளும் சேர்ந்து கொண்டன. ஆனால், அதையும் தாண்டி பொது மக்கள் முன்னேறத் தொடங்கினர். 

காவலர்களை விட பொது மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் காவல் துறையினரை எளிதில் விரட்டி அடித்து முன்னேறினர். 

இதற்கிடை யில் தூத்துக்குடி நகரப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் கிராமங் களின் வழிகள் அனைத்தும் போலீஸாரால் அடைக்கப் பட்டது. 

பொது மக்களின் எதிர் வினையால் காவல் துறையினரின் வாகனங்கள் கவிழ்க்கப் பட்டன. வழிகள் அடைக்கப் பட்டாலும் அலைந்து திரிந்து போராட்டக் களத்துக்கு வந்து சேர்ந்தனர் பொது மக்கள். 

அமைதியான வழியில் போராடிய தங்கள் மீது தடியடி நடத்திய தால் எரிச்சல் அடைந்த மக்கள் காவல்துறை வாகனங்க ளுக்குத் தீ வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு அருகில் வரவர பொது மக்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்தது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் போது 20,000க்கும் அதிகமான மக்கள் திரண்டி ருந்தனர். தூத்துக் குடியின் பனிமய மாதா கோயிலில் இருந்து கிளம்பியது 

போன்றே மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு அருகில் இருந்த கோரம் பள்ளத்தில் பல்வேறு கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வல மாக வந்துள்ளனர். 

தூத்துக்குடி டவுனில் இருந்து வந்த ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை அடைந்ததும் கோராம் பள்ளம் மற்றும் பல்வேறு கிராம மக்கள் வருவதாகத் திட்ட மிடப்பட்டி ருந்தது. அனைத்து மக்களும் ஒன்றி ணைந்தனர்.

மாபெரும் எழுச்சி அங்கே உருவாகிக் கொண்டிருந்தது. காவல் துறையினரின் தடியடிகளையும் தடைகளையும் மீறி குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் அந்த எழுச்சிக் கூட்டத்தில் கலந்திருந்தனர். 

இது வரை தூத்துக்குடி மாநகரம் கண்டிராத எழுச்சி ஊர்வலம் கண் முன்னே நிகழ்ந்தி ருக்கிறது.

அந்த ஊர்வலத்தின் அதிகபட்ச நோக்கம் ஸ்டெர் லைட்டுக் கெதிராக மாபெரும் மக்கள் திரளாக சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பது. அவ்வளவே. ஆனால் நிகழ்ந்தது, நிகழ வைக்கப் பட்டது அதுவா?

பொது மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்துக்கு வந்த பிறகு நிகழ்ந்தவை குறித்து சோரீஸ் புரத்தைச் சேர்ந்த காட்வின் கூறுகையில், 
பொது மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்துக்குள் நுழைய முயன்றோம். எங்களைத் தடுத்து நிறுத்தியது காவல்துறை. 

அங்கேயே நின்று பலரும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டி ருந்தோம். மீண்டும் போலீஸ் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். ஆனால், அதையும் மீறி நாங்கள் கோஷம் போட்டபடி முன்னேறினோம். 

அப்போது வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை நெருங்கிச் சென்று கொண்டி ருக்கும் நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்து விட்டனர். 

அப்போதே இருவர் மீது குண்டு பாய மற்ற அனைவரும் மெயின் ரோட்டுக்கு ஓடி வர ஆரம்பித்தோம். 

சிறிது நேரம் கழித்து இன்னும் அதிகமான மக்களோடு உள் நுழைந்து சென்றால் எங்களை வர விட்டு மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். 

இப்படி வெளியே ஓடுவதும் பின்பு மாவட்ட ஆட்சியர் வளாகத்து க்குள் செல்வதுமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்தது. 

ஒவ்வொரு முறை உள்ளே செல்லும் போதும் பொது மக்கள் மீது குண்டுகள் பாய்ந்து கொண்டே தான் இருந்தன. னக்குப் பக்கத்தில் இருந்த அக்காவுக்கு காலில் புல்லட் உரசிப் போனதில் சதை பிய்ந்து ரத்தம் கொட்டியது. 

குண்டுகள் பாய்ந்த பலரையும் டூவிலரில் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். இதனால் ஆத்திரத்தில் சிலர் அங்கிருந்த ஓரிரு வாகனங் களுக்குத் தீ வைத்தனர். 
ஆட்சியர் அலுவல கத்தை கல்வீசி சேதப் படுத்தினர் எனத் துப்பாக்கிச் சூட்டின் பயம் தாண்டியும் போராடிய காட்சிப் படிமத்தை கண்முன்னே கொண்டு வந்தார்.

தூத்துக் குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கூறுகை யில், துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதைப் பார்த்ததும் நாங்கள் சிதறி ஓட ஆரம்பி த்தோம். 

அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது எனச் சில பெரியவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயிலில் எல்லோரை யும் அமரச் செய்தனர். 

அமைதியாக அமர்ந்திருந்த எங்கள் மீது வெளியூர்களில் இருந்து வந்த போலீஸ் வேன்களில் வந்தவர்கள் தடியடி நடத்த ஆரம்பித்தனர். 

அதற்குப் பயந்து ஆட்சியர் அலுவலகத் துக்குள் ஓடினால் அங்கே முன்பை விட அதிகமான போலீஸ் காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

சிதறி ஓடிய எல்லோரை யும் துரத்தி வந்து சுட்டனர். வெளியே மெயின் ரோட்டுக்கு வந்தால் அங்கேயும் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தது. 
சரமாரியான துப்பாக்கிச் சூடு என்பதை வாழ்க்கையில் அப்போது தான் பார்த்தேன். வேறு வழியில்லாமல் பலரும் புதர்களுக் குள்ளும் முட்களுக் குள்ளும் உருண்டு விழுந்து ஓடினார்கள். 

நாங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே எங்கள் அருகில் ஓடியவர்கள் குண்டடிப் பட்டு சுருண்டு விழுந்தனர். 

ஓட முடியாமல் கீழே விழுந்தவர்கள் ஆங்காங்கே ஒளிந்தி ருந்தவர்கள் என எல்லோரையும் தேடிப் பிடித்து அருகில் வைத்தே துப்பாக்கி யால் சுட்டனர். 

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய ஓட்டத்தில் பல்வேறு கிராமங்களுக் குள்ளும் புகுந்து ஓடினோம். 

நாங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே பல இடங்களில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது" என்றவர் குரல் நடுங்கிய படியே இருந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக் குடியைச் சேர்ந்த ஜோனத் தானிடம் பேசுகை யில், 
"போராட்டக் காரர்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்திலேயே துப்பாக்கிச் சூட்டில் வெளியே ஒடி வந்து விட்டனர். 

அப்படி இருக்கும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பயங்கர மாக சூறையாடப் பட்டது எப்படி எனத் தெரிய வில்லை. 

அதே போன்று அவர்கள் ஓடி வந்த பின்னர்தான் தீயின் அளவும் அதிகமாக எரியத் துவங்கியது. 

இதற்கு முன் போன மாதத்தில் ஒரு முறை கூட பொது மக்கள் ஒன்று சேர்ந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக் காங்க. 

இது நாள் வரை அமைதியாக நடந்து வந்த போராட்டத் துக்கு திடீரென 144 தடை உத்தரவு விதித்தது, போலீஸார் குவிக்கப் பட்டது எதனால் எனப் புரிய வில்லை" என பல்வேறு சந்தேகங் களை அடுக்கினார்.

இது நாள் வரை அமைதியாகப் போராடிய மக்கள் மீது இவ்வளவு ஒடுக்கு முறைகள் நிகழ்த்தப் பட்டது யாருக்காக? 
ஒளிந்தவர்களை இழுத்து வைச்சு சுட்டார்கள்... சொல்லும் சாட்சிகள் !
நிலவர த்தைக் கட்டுக்குள் கொண்டு வரவே தடியடியும் துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தப் பட்டது எனச் சொல்லும் அரசுக்குக் காவல் துறையினரின் வன்முறை தெரியாமல் போனது எப்படி? 

சரி நிலைமை கட்டுக்குள் இல்லை என்றாலும் எடுத்த எடுப்பிலேயே உயிரைப் பறிக்கும் துப்பாக்கி களைப் பயன்படுத்த அனுமதி உண்டா? முட்டிக்குக் கீழ் சுட வேண்டும் என்ற விதிமுறையும் பின் பற்றப்பட வில்லை. 

சுடப்பட்டு இறந்திருப் பவர்களில் எல்லோரு க்கும் இடுப்புக்கு மேல் தான் குண்டு பாய்ந்துள்ளது. இறந்தவர்களில் பலரும் போராட்டத்தை ஒருங்கிணை த்ததில் முக்கிய மானவர்கள். 

இவர்களெல்லாம் குறி வைத்துக் கொல்லப் பட்டிருக்கிறார்களா? இவற்றை யெல்லாம் இணைத்துப் பார்க்கும் போது  இது திட்டமிட்டு நிகழ்த்தப் பட்ட அரச பயங்கர வாதமோ என்ற கேள்வி எழுகிறது. 
தாமிரபரணி படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு, கூடங்குளம் எனத் தமிழ் நாட்டு வரலாற்றின் அனைத்து அரசு படுகொலை களும் கண்முன் வந்து போகின்றன. 

ஆம், என்ன தான் பசப்பு வார்த்தை களை அரசு கூறினாலும் தூத்துக் குடியில் நிகழ்ந்தது தன் மக்கள் மீது அரசே நிகழ்த்திய பச்சைப் படுகொலை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)