பலூன் விற்று தாயைக் காப்பாற்றும் உடல் வளர்ச்சியில்லாத தாயுமானவன் | He sold out the balloon and sold the body to a mother who was not a child ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016பலூன் விற்று தாயைக் காப்பாற்றும் உடல் வளர்ச்சியில்லாத தாயுமானவன் | He sold out the balloon and sold the body to a mother who was not a child !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
மூளைக் காய்ச்ச லால் ஏற்பட்ட பாதிப்பில் தன் உடல் வளர்ச்சி குறைப்பட்ட நிலையிலும் இன்றும் பலூன் விற்று 


தன்னோடு தன் தாயையும் சேர்த்து பார்த்துக் கொண்டு வாழ்கையில் உயர்ந்து நிற்பதோடு தாயுமான வனாகவும் விளங்கி வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர்.

தஞ்சாவூர் குருவிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்.

47 வயதுடைய இவர் தனது பதிமூன்று வயதி லிருந்து பலூன் விற்று பிழைப்பு நடத்துவதோடு தன் அம்மாவை யும் இவரே பார்த்து வருகிறார்.

அவர் வீட்டுக்குச் சென்றோம். மிகிச்சிறிய குடிசை வீட்டில் தன் அம்மாவோடு வசித்து வருகிறார்.

சிறிய மண்ணெண்ணெய் விளக்கு ஒன்று தன்னால் முடிந்த அளவிற்கு அந்தச் சிறிய வீட்டில் வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தது.

விளக்கிற்கு அருகில் பலூன்கள் மற்றும் தட்டைகள் சிதறிக் கிடந்தன.

இவை அனைத்தும் தான் நாளைக்கு எங்கள் வயிற்றை நிரப்பப் போகின்றன என்றவாறே அவற்றை தயார் செய்வதில் மும்முரமாக இருந்தார்.

அவருக்கு வேண்டிய உதவி களை அவர் அம்மா திருவாயி செய்து கொண்டி ருந்தார்.

அவரிடம் பேசினோம், நான் சின்னப் பையனா இருக்கும் போது நல்லா ஓடியாடி விளையாடு வேன்னு அம்மா சொல்லும்.

எனக்கு ஏழு வயசு இருக்கும் போது உடம்பு சரியில்லாமல் போய் கடுமை யான காய்ச்சல்.

அம்மா என்னைய தூக்கிக் கொண்டு அரசு ஆஸ்பத் திரிக்கும் வீட்டுக்கும் அழையா அழைஞ்சிச்சு. ஆனாலும் நோவு சரியாக வில்லை.

அப்பறம் ஆஸ்பத்திரி யிலேயே தங்க வைத்து பார்த்தார்கள். அப்ப தான் எனக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

அந்த சமயத்தில் இருந்த டாக்டர் ஒருத்தர் கலங்கி நின்று கொண்டிருந்த என் அம்மாவிடம் மூளையில் சின்னதா ஒரு ஆபரேஷன் செஞ்சா எல்லாம் சரியாகிடும் என சொன்னார்.


அப்பதான் அம்மா லேசா சிரிக்க ஆரம்பிச்சுச்சு. டாக்டர் சொன்னது போலவே ஆபரேஷன் நடந்துச்சு. காய்ச்சல் நின்னுடுச்சு.

எனக்கு ஆபரேஷன் செய்த டாக்டருக்குப் பாராட்டி பட்டமெல்லாம் கொடுத் தாங்கடா என அடிக்கடி அம்மா சொல்லும்.

காய்ச்சல் நின்ன என்னை அம்மா சந்தோஷமாக இடுப்பில் உட்கார வச்சுக் கிட்டு நடந்தே வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்துச்சி.

முடங்கிக் கிடந்தேன்

அதற்கு முன்னால் ஓடியாடி திரிந்த நான் விளையாட முடியாமல் தவித்தேன். என் உடம்பில் மற்றவர் களை போல் வளர்ச்சி யில்லாமல் பாதிக்கப் பட்டது.

இதனால் பல வருடங்கள் வீட்டுக் குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.

என் அண்ணன் களைப் போல் நான் இல்லையே என அம்மா எப்பவுமே என்னைய நினைத்தே கவலைப் படும்.

அம்மாவுக் காகவாது எதாவது செய்ய வேண்டும் என நினைத்த நான் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து பலூன் வாங்கி விற்க ஆரம்பித்தேன்.

அப்போ எனக்கு பதிமூனு வயசு இருக்கும். அதுல கொஞ்சம் காசு கிடைத் தாலும் எனக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு.

அன்றைக்கு ஆரம்பிச்சது இன்று வரை எனக்கு மட்டும் இல்ல என் அம்மாவி ற்கும் சேர்த்து சோறு போடுது என்றவர் தொடர்ந்தார்.

ஆரம்பத்தில் அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு கடைக்குச் சென்று பலூன் வாங்கி அதை ஊதி

பின்னர் கோவில் மற்றும் குழந்தைகள் கூடும் பகுதிகள்ல விற்ப்பேன். இதில் பெரிய அளவில் காசு கிடைக்காது.

ஆனாலும், அம்மாகிட்ட வாங்கிய காசை திருப்பிக் கொடுத்து விட்டு மீதி இருக்கும் காசில் அடுத்தடுத்த நாள்கள் பலூன் வாங்கி விற்க ஆரம்பித்தேன்.

கிடைக்கும் காசை அம்மாவிடம் கொடுப்பேன். என் மீது அம்மாவு க்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு.

அப்புறம் காலங்கள் கடந்துச்சு. எல்லா அண்ணன் களுக்கும் கல்யாணம் ஆகி தனிக் குடித்தனம் போயிட்டாங்க.

அவங்க குடும்பத்தை கவனிப் பதற்குத் தான் அவங்க சம்பாதிப்பது சரியா இருந்துச்சு எங்களை கவனிக்க முடியலை.

நானும் அம்மாவும் ரொம்பவே கஷ்டப் பட்டோம்.

அப்புறம் சும்மா வெறும் பலூனை ஊதி விற்றால் வேலைக்கு ஆகாது. இதில் எதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.

காட்டுப் பகுதிகளி லிருந்து தட்டைகளை எடுத்து வந்து அதை நறுக்கி அதில் பீப்பி வைத்து

அதை ஊதிய பிறகு பீப்பி சவுண்ட் வருவது போல் செய்து விற்க ஆரம்பித்தேன்.

சின்னக் குழந்தைகள் எல்லாம் மாமாகிட்ட பலூன் வாங்கிக் கொடு எனச் சொல்லும் போது மகிழ்ச்சி யடைவேன்.

காசு இல்லைன்னு சொன்னாலும் சும்மாவே பலூனைக் கொடுத்து விடுவேன்.

எல்லாச் செலவும் போக முப்பதில் இருந்து ஐம்பது ரூபாய் வரை லாபம் கிடைக்கும். பல நாள்கள் அதுவும் இருக்காது.

கிடைக்கிற காசை அப்படியே அம்மாவிடம் கொடுப்பேன்.

அது எல்லாச் செலவையும் பார்த்து கொள்வதோடு பலூன் விற்க அலையுற எனக்கு நல்ல சாப்பாடும் கொடுக்கும்.

சந்தோஷமா வச்சிருக்கேன்


விளையாட்டா பலூன் விற்க ஆரம்பித்தேன் அது இன்று என் அம்மாவு க்கும் சேர்த்து சோறு போடுது.

இருபத்து ஐந்து வருடத்துக்கு மேல் எனக்கு இது தான் வாழ்க்கை. உடலில் வளர்ச்சி குறை பாட்டால் என் வாழ்கையில் வளர்ச்சி இல்லாமல் போனது.

வர வருமான த்தை வைத்து என் அம்மாவ சந்தோஷமா வச்சிருக்கேன்.

இதையே என் வாழ்க்கை யில் வரமாகவும், மகிழ்ச்சி யாகவும் பார்க்கிறேன் என நெகிழ்ச்சி யோடு திக்கித் திணறிச் சொன்னார்.

அம்மா திருவாயி,”எம் புள்ளை என்ன ஆகுமே என நினைத்துக் கவலை பட்டேன்.

இன்றைக்கு எனக்கே சாப்பாடு போடுறான். நான் மத்த பிள்ளைகள நம்பினேன் யாரும் என்னை கண்டுக்கல.

இவனுக்கு சொக்கலிங்கம் என பேர் வச்சேன் ஆனா சொக்கத் தங்கமா என்னையா பார்த்து கிறான்.

இவனுக்கு உடம்பில் வளர்ச்சி யில்லை. ஆனால் அன்பால் உயர்ந்து நிற்கிறான்.

எனக்கு ஒரே ஒரு கவலை தான் இப்பவே எனக்கும் எண்பது வயசுக்கு மேல ஆகிடுச்சு எனக்குப் பிறகு என் மவனை

யார் பார்த்துக்க போறார்ன்னு நினைக்கிறப்ப தான் கவலையா இருக்கு. அவனால் முன்ன மாதிரி அலையவும் முடியலை.

அரசாங்கம் எதாவது உதவி செய்து அவனுக்குச் சின்னதா கடை வைத்துக் கொடுத்து உதவி செய்தால்

அதை வச்சு அவன் பொழச்சுக் குவான் என தாயிக்கே உரிய தவிப்போடு கூறுகிறார்.
பலூன் விற்று தாயைக் காப்பாற்றும் உடல் வளர்ச்சியில்லாத தாயுமானவன் | He sold out the balloon and sold the body to a mother who was not a child ! பலூன் விற்று தாயைக் காப்பாற்றும் உடல் வளர்ச்சியில்லாத தாயுமானவன் | He sold out the balloon and sold the body to a mother who was not a child ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 3/14/2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚