கிணற்றில் கார் பாய்ந்து உயிர் தப்பிய அதிசயம் !

0
திருப்பூர் மாவட்டம் அருகே நடைபெற்ற விபத்தில், சாலை யோரக் கிணற்று க்குள் கார் பாய்ந்தது. அதிர்ஷ்ட வசமாக 5 பேர் உயிர் தப்பினர்.
கிணற்றில் கார் பாய்ந்து உயிர் தப்பிய அதிசயம் !
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் தன்னுடைய மனைவி ராதாமணி மற்றும் உறவினர்கள் 5 பேருடன் உடுமலைப் பேட்டை நோக்கி சென்று கொண்டி ருந்தார். 

இந்நிலை யில், பல்லடத்தை அடுத்துள்ள மந்திரி பாளையம் என்னும் இடத்தைக் கார் கடக்கும் போது, காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்தி ருக்கிறது. 

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த கிணற்று க்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டி ருக்கிறது.

விவசாயி ஒருவரு க்குச் சொந்தமான அந்தக் கிணற்றில் கார் விழுந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடி யாக ஓடிச்சென்று காரில் இருந்தவர் களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் பகுதி தீயணைப்புத் துறையினர்,  சுமார் ஒரு மணி நேரம் போராடி, காருடன் கிணற்று க்குள் சிக்கித் தவித்த அனைவரை யும் சிறு காயங் களுடன் மீட்டனர். 

கிணற்றில் தண்ணீர் வற்றியி ருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டு இருக்கிறது. இச்சம்பவத் தால் சில மணி நேரம் உடுமலை சாலை பரபரப்புடன் காணப்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings