மிலாடி நபி என்றால் என்ன? | What is the Milady Nabi?

0
மனிதர்கள் தவறான பாதையில் சென்ற காலத்தில், அவர்களை நல்வழிப் படுத்துவதற் காக இறைவனால் அனுப்பப் பட்ட தூதுவர் களாக நபிமார்கள் விளங்கினர்.
மிலாடி நபி என்றால் என்ன?



அரபுநாட்டில் வாழ்ந்தவர் களின் நிலைமை படுமோச மாக இருந்த காலத்தில், அங்கே குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோத செயல்கள் நடப்பதுமாக இருந்தது.

இத்தகைய பாவகர மான வாழ்க்கையை மேற்கொண் டிருந்த மக்களை சீர்திருத்த அல்லாஹ் வால் பூமிக்கு அனுப்பப் பட்ட மாமணிதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அண்ணலார் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி.570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித் தார்கள். இவர்களது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ் அவர்கள். தாய் ஹஜ்ரத் ஆமீனா அவர்கள்.
நாயகம் அவர்களின் முழுப்பெயர் "ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்பதாகும். இவர்கள் பிறப்ப தற்கு முன்ன தாகவே தந்தை அப்துல்லாஹ் அவர்கள் காலமாகி விட்டார்கள்.

தாயார் ஆமீனா அவர்கள், இவர்கள் பிறந்த 6ம் ஆண்டில் கால மானார்கள். எனவே ஹஜ்ரத் அப்துல் முத்தலிப் என்று அழைக்கப் பட்ட இவர்களது பாட்டனார், நாயகத்தை வளர்த்து வந்தார்கள் .

பிறகு அவர்களும் காலமாகி விடவே, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் அவர்களது பராமரிப்பில் வளர்ந்து வந்தார்கள். நபிகள் நாயகம் அவர்கள் இளமை யிலேயே செல்வாக் குடனும், நற்குணத் துடனும் திகழ்ந் தவர்கள்.

இதன் காரண மாக மக்கள் அவர்களை "அல்அமீன்' (நம்பிக்கை யாளர்), என்றும், "அஸ் ஸாதிக்' (உண்மை யாளர்) என்றும் பாராட்டினர். 23ம் வயதில் இவர் கதீஜா (ரலி) அம்மையாரை நபிகளார் திருமணம் செய்து கொண்டார்கள்.



40ம் வயதில் இவர்களை தனது தூதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகம்(ஸல்) அவர்களுக்கு 11 மனைவி மார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். ஆண் மக்கள் மூவரும் குழந்தையாக இருந்த போதே இறந்து விட்டனர்.

பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார், இவருக்கு இரண்டு பேரன்மாரை பெற்றுத் தந்தார்கள். அவர்களு க்கு ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) என பெயரிடப் பட்டது.
பாத்திமா அம்மையார் அவர்கள் "சுவர்க்கத்து பெண்களின் தலைவி' என போற்றப் படுகிறார்கள். நபிகள் நாயகம் அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப் பட்டதும், ""நமது வணக்கத் திற்குரி யவன் அல்லாஹ் ஒருவனே.

நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன்,'' என்று சொன் னார்கள். இதைக் கேட்ட மெக்கா வாசிகள் அவரை கொடுமை செய்தனர். 53ம் வயது வரை அவர்கள் கடுமை யான சோதனை களை அனுபவித் தார்கள்.

இதன் காரணமாக மெக்காவி லிருந்து 450 கி.மீ. தூரத்திலுள்ள மெதீனா வுக்கு குடிபெயர வேண்டிய தாயிற்று. மெதீனா வில் தான் நாயகம் அவர்களை ஆதரித்த மக்களின் எண்ணி க்கை பெருகியது.




இதன் பிறகு பல யுத்தங்கள் செய்து மெக்கா நகர மக்களை யும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் செய்தார்கள் நாயகம் அவர்கள். நபிகள் நாயகம் மிகுந்த பணிவுடை யவர்கள். பிறரது துன்பத்தை நீக்குவதில் இவர்களு க்கு இணை யாரு மில்லை.

அவர்கள் இவ்வுலகில் தங்களது 63ம் வயதுவரை வாழ்ந் தார்கள். கி.பி.632, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதியில் இவ்வுலகைத் துறந் தார்கள். அவர்கள் பிறந்ததும் மறைந் ததும் ஒரே நாளில் தான். இந்த நாளையே "மிலாடி நபி' என்னும் பெயரில் கொண்டாடு கிறார்கள்.
எமது குழந்தை களுக்குப் பெயர் வைக்கும் போது “முஹம்மத்” எனப் பெயர் வைத்து விட்டால் நாம் நபியை நேசிப்பதாய் விடாது. அல்லது அவர்களது பிறந்த தினத்திற்கு விழா எடுத்தால் அது நபி மீது நேசம் கொண்டதற்குச் சாட்சியாகவும் அமைந்து விடாது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)