குர்பானியின் சுகாதாரம் தெரிந்து கொள்ளுங்கள் ! #Qurbani





குர்பானியின் சுகாதாரம் தெரிந்து கொள்ளுங்கள் ! #Qurbani

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
மழை கொட்டி தீர்த்து லேசாக தூரல் விழுந்து கொண்டிருந்தது, வாசலில் கெட்டி கிடந்த மழை நீரில் பேத்திகளுக்கு காகிதக் கப்பல் செய்து விளையாட்டு காட்டி கொண்டிருந்தார் சாகுல் ஹமீது.
குர்பானியின் சுகாதாரம் தெரிந்து கொள்ளுங்கள் ! #Qurbani
பேத்திகள் லுப்னா, ஷமீரா, ரிஃப்கா மூவரும் அவரை விட்டு சிறிது நேரம் கூட பிரிவதில்லை.  அவர் பொழுது எப்பொழுதும் பேத்திக ளுடனேயே கழிந்து கொண்டி ருந்தது.

வாப்பா, வாப்பா...

என்னமா லுப்னா? என்று பாசத்துடன் ஆறாம் வகுப்பு படிக்கும் தன் செல்ல பேத்தியின் தலையை கோதி விட்டார் சாகுல் ஹமீது.
ஹஜ்ஜுப் பெருநாள் வருதே நம்ம வீட்டுல கிடா பிடிக்கலையா ?

பிடிக்கனும், செவ்வாய்க் கிழமை சந்தையில போய் தான் பிடிக்கனும், ஏமா, இப்ப என்ன அவசரம், ஒரு வாரத்திற்கு முன்னாடியே பிடிச்சிடலாம் என்ற வரிடம் ,
வாப்பா நாம இந்த வருஷம் குர்பானி கொடுக்க வேண்டாம், போன தடவை ஹஜ்ஜுப் பெருநாளப்ப தான் சிக்கன் குனியா வந்துச்சு, ஊரெல்லாம் காய்ச்சல், 

நடக்க முடியாம எத்தனை பேர் நம்ம ஊரில் கஷ்டப் பட்டாங்க என்றாள் லுப்னா. சரிமா, ஆனால் குர்பானி கொடுப்பது நம்ம கடமைம்மா, இத்தனை வருஷமா கொடுத் திட்டு வர்ரோம்லே என்றார்.

வாப்பா எல்லாரும் மதராஸா விற்கு பணம் கொடுக்க றாங்களாம், அங்க நம்ம சார்பா குர்பானி கொடுத்திடு வாங்களாம், அப்படி செய்வோமா? என்றாள் விடாப் பிடியாக லுப்னா.

இல்லமா நம்ம வாசலில் வைத்து தான் கொடுக் கணும், அது தானே முறை, இத்தனை வருஷ மாக அப்படி தானேமா நடக்குது,
வாப்பா எல்லாரும் வாசலில் வைத்து கொடுத்து இரத்தம் எல்லாம் அப்படியே கிடக்கும், மண்ணை போட்டு மூடினாலும், 

இப்ப மழை காலம் மழை பேய்ஞ்சா நாறிப் போகும், கொசு வரும், திரும்ப எல்லாரு க்கும் காய்ச்சல் வரும்.

ஆமா, என்னமா செய்ய, நாம் கிடா கொடுத்து நம்ம சொந்த பந்தம், அக்கம் பக்கம், வசதி யில்லாத ஏழை ஜனங்கள் எல்லா ருக்கும் கறி கொடுத்து பழகிட் டோமே? அதை எப்படி நிறுத்தறது?

வாப்பா நம்ம ஊரில் slaughtering house இருக்கா?

அப்படின்னா என்னமா?

அது தான் வாப்பா ஆடு, மாடு வெட்டற இடம்.

அட ஆமா இருக்கு, அரசாங்கமே கெட்டி போட்டி ருக்கே!

போன வருஷம் கூட சட்டம் கொண்டாந் தாங்களே, கறிக்கடை காரங்க எல்லாம் அங்க போய் தான் வெட்டி கொண்டு வரணும் என்று, அதற்கு கூட போராட்டம், கடையடைப்பு நடந்துச்சே!

இப்ப யாரும் அங்க போய் வெட்டுற மாதிரி தெரியலையே, ஒரு கிடாவிற்கு ரூபாய் இருபத்தைந்து கொடுக்கணும் என்று 
கொளுத்தவனுக்கு கொள்ளு...இளைத்தவனுக்கு எள்ளு எப்படி?
அரசாங்கம் சட்டம் போட்டது அது முடியாதுன்னு எல்லாரும் கடையை அடைச்சாங்க, அதனை எட்டு ரூபாயாக குறைக்க சொல்லி தான் போராட்டம்.

நம்ம ஊர் மக்களுக்கு தான் தினமும் கறி சாப்பிடனுமே, ஊர் எப்படி நாறிப் போனாலும் பரவாயில்லை,  நோய் வந்து அவதிப்பட்டாலும் புரியலை, சுத்தம் சுகாதாரம் யார் பார்க்கிறா? என்றார் சாகுல் ஹமீது.

வாப்பா மற்றவங்களை பற்றி பேச வேண்டாம், நாம ஆரம்பிச்சு வைப்போம். 

அங்கே கொண்டு போய் குர்பானி கொடுத்து, வெட்டி சுத்தமாக கறியை மட்டும் எடுத்து வந்து நம்ம வீட்டில் வைத்து பங்கீடு செய்யலாம்”.

இதுவும் நல்ல யோசனை தான். நாம இந்த வருஷம் செய்தால் நம்மளை பார்த்து நாலு பேர் செய்வாங்க, அப்படியே எல்லாரும் இப்படி கொடுக்க ஆரம்பிச் சுட்டாங்கன்னா பெருநாள் சமயம் ஊர் சுத்த மாக இருக்கும்,

நம்ம ஜனங்க இருக்கிற இடத்தில் கொடுப்ப தால் தானே புதுசு புதுசாக நோய் வருதுன்னு டிவியில் கூட சொன்னாங்க போன வருஷம், 

நம்ம இஸ்லா மியர்கள் இருக்கிற ஊர்களை தான் இந்த சிக்கன் குனியா அதிகம் தாக்கியதாக டிவியில் காட்டினாங்களே வாப்பா. சரிமா, ஆனால் அது சிரமமாச்சே!”என்றார் சாகுல் ஹமீது.
வருஷத்தில் ஒரு நாள் சிரமம் பார்த்தால் முடியுமா வாப்பா? நம்ம ஊருக்கும் மக்களுக்கும் எது நல்லதோ அதை கடை பிடிக்கணும், 

அப்ப தான் எல்லாரும் நல்லா யிருப்பாங்க. என்ற பேத்தியின் அறிவான பேச்சை கேட்டு வாயடைத்து போனார் சாகுல் ஹமீது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)