விண்வெளியில் நடந்த முதல் குற்றச் செயல்? விசாரணையில் நாசா ! The first crime in space? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

விண்வெளியில் நடந்த முதல் குற்றச் செயல்? விசாரணையில் நாசா ! The first crime in space?

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
முன்னாள் வாழ்க்கைத் துணையின் வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கிய தாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது.
விண்வெளியில் நடந்த குற்றச் செயல்
விண்வெளியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இங்கே தங்கியிருந்து விண்வெளி ஆய்வில் ஈடுபடுவார்கள். 

இந்நிலையில், விண்வெளியில் நடந்த முதல் குற்றமாக கருதப்படும் ஒரு சம்பவம் அங்கே நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏன் மெக்லைன் என்ற வீராங்கனை மீதுதான் புகார் எழுந்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையம்
தமது முன்னாள் தன் பாலின இணையருக்கு சொந்தமான வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதற்காக ஏன் மெக்லேன் மீது அவரது முன்னாள் வாழ்க்கைத்துணை சம்மர் வொர்டன் புகார் அளித்துள்ளார். 
விண்ணில் இருந்து வங்கி கணக்கை இயக்கியதாக ஒப்புக் கொண்ட ஏன் மெக்லைன், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். 
மெக்லைன்
தம் முன்னாள் இணையர் மற்றும் அவரது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என்று தான் பரிசோதனை மட்டுமே செய்ததாக கூறியுள்ளார். 

தன் பாலின இணையனரான ஏன் மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப் படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 
சம்மர் வொர்டன்
பின்னர், குழந்தையை தத்தெடுக்கும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2018-ம் ஆண்டில் விவாகரத்து க்கு விண்ணப்பித்தனர். 

தனது வங்கிக் கணக்கை ஏன் மெக்லைன் இயக்கியதாக சம்மர் வொர்டன் மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, ஏன் மெக்லைன் பூமிக்கு திரும்பி விட்டார். 
நாசா
இது தொடர்பாக விசாரிக்க நாசா தனிக்குழுவை அமைத்துள்ளது.  சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள விண்வெளி வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ அந்த நாடுகளின் சட்டம் அவர்களுக்கு பொருத்தும். 

உதாரண மாக விண்ணில் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஒருவர் குற்றம் செய்தால், அவர் ரஷியா நாட்டு சட்ட விதிகளின்படி விசாரிக்கப் படுவார். 

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close