தென்காசி டாக்டர் ராமசாமி பீஸ் 10 ரூபாய் தான் !

0
சாதாரண அழுக்கு உடையுடனும், உழைத்துக் களைத்த முகத்துடனும் கையில் இருபது ரூபாயுடன், இவ்ளோ தான் சார் இருக்கு. 
தென்காசி டாக்டர் ராமசாமி பீஸ் 10 ரூபாய் தான் !
இதுக்குள்ள வைத்தியம் பார்த்துடுங்கனு வந்து நிப்பாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த இருபது ரூபாயை வாங்கிட்டு ஊசி போட்டு மாத்தி ரையையும் கொடுத்தனுப் பிருவேன். 

எதுக்கு இருபது ரூபா வாங் குறீங்க... சும்மாவே ட்ரீட்மென்ட் கொடுக்கல?’னு நீங்க கேட்கலாம். இலவசமாக் கிடைக்கிற எதுக்கும் மரியாதை இருக்காது... 

அதோட அடிப்படை மருந்துச் செலவுக்கும், கிளினிக் மெயின் டெனென்ஸுக் காவது பணம் வேணு மில்லையா? 

அதனால தான் அவங் களால முடிஞ்ச காசை வாங்கிக் கிறேன்... மிக இயல்பாகப் பேசுகிறார் டாக்டர் ராமசாமி. தென்காசி மக்கள் ராமசா மிக்கு வைத்துள்ள பெயர், 10 ரூபா டாக்டர்.

டாக்டர் ராமசாமி
தென்காசி, வாய்க்கால் பாலம் அருகில் இருக்கும் ராமசாமி யின் கிளினிக் எல்லா நேரத்தி லும் நிரம்பி வழிகிறது. 

காத்திரு க்கும் எல்லா முகங் களிலும் ஏழ்மையின் அடையாளம். எவரிடமும் எந்தப் பாகுபாடும் இல்லாமல், கனிவும் கருணை யும் ததும்பப் பேசி, விசாரித்து, சிகிச்சை யளித்துக் கொண்டிருக் கிறார் ராமசாமி.

நம்மை அறிமுகப் படுத்திக் கொண்டதும் சிறிதும் தயக்கமின்றி, `நிறைய பேஷன்ட் இருக்காங்க... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..." என்று கூறி விட்டு கவனம் பிசகாமல் பணியில் இணைகிறார்.

உணவு இடை வேளையில் பேசினோம்.

நான் பெரிசா என்ன பண்ணிட் டேன்னு என்னைப் பார்க்க வந்திருக் கீங்க... மருத்துவ ம்ங்கிறது சேவை தானே... 
நாங்க படிச்சப்போ, எங்க பேராசிரியர்கள் எல்லாம் அப்படித் தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்க. 

கடந்த நாற்பத்தாறு வருசமா இப்படித் தான். ஆரம்பத்துல ஒரு ரூபா, ரெண்டு ரூபாதான் வாங்கினேன். 

இப்ப தான் பத்து ரூபா. காசு பெரு சில்லை... நாம பார்க்குற வேலைக்கு ஒரு மரியாதை இருக்கணு மில்லே... அதுக்காகத் தான் இது...’’

உற்சாக மாகப் பேசுகிறார் ராமசாமி.
என்னோட சொந்த ஊர் கோவில்பட்டி பக்கத்துல நாலாட்டின் புத்தூர். அம்பாச முத்திரம் அரசுப் பள்ளியில படிச்சேன். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி யில ரெண்டாவது பேட்ச் நாங்க. 

படிப்பு முடிஞ்சதும் கருங்குளம் அரசு மருத்துவ மனையில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை நேரம் போக, மீத நேரத்துல கருங்குளத்துலயே ஒரு கிளினிக் ஆரம்பிச்சேன். 

அப்ப இருந்தே, காசைப் பாக்குற தில்லை. இருந்தாக் கொடுப்பாங்க. இல்லேன்னா, போயிடு வாங்க. நானே சிலபேருக்கு பஸ்ஸு க்குக் காசு கொடுத்து அனுப்பி வைக்கிறதும் உண்டு. 

அப்படி, ஆரம்பிச்சது... இப்ப வரை க்கும் அந்தப் பாதை மாறலை..." - சிரிக்கிறார் ராமசாமி. ஒரு மருத்துவர், குடும்ப மருத்து வராக இருப்பது இயல்புதான். ஆனால், குடும்பத் தில் ஒருவராக மாறுவது சிறப்பு. 

ராமசாமியை அப்படித்தான் மக்கள் நினைக் கிறார்கள். அது பற்றிக் கேட்டா லும் அதே புன்ன கையை உதிர்க் கிறார் ராமசாமி.
அது கொஞ்சம் பெரு மிதமான விஷயம் தான். எவ்வளவு வேணும் னாலும் காசு சம்பாதிச் சுடலாம். மனித ர்களைச் சம்பாதிக் கிறது கஷ்ட மில்லையா... நான் நிறைய மனிதர் களைச் சம்பாதிச்சு ருக்கேன்.

மருத்துவ த்தைப் பொறுத்த வரை, நம் மக்களுக்கு விழிப்புணர்வு போதலை. அதே நேரத்துல, நம்ம நாட்டுல மருத்துவத்துல ஏகப்பட்ட பாகுபாடு நிலவுது. 

ஏழைக்கு அரசு மருத்துவ மனை, பணக்காரங் களுக்கு தனியார் மருத்துவ மனைனு ஒரு நிலை இருக்கு. 

இது ரொம்பவே பாவம். கல்வி, மருத்துவம் ரெண்டும் அரசாங்கம் கையில தான் இருக்கணும். அரசாங்கம் மக்களுக்கு நல்ல மருத்துவ த்தை உறுதி செய்யணும்.

சிறந்த மருத்து வருக்கான சான்றிதழ்

இன்னை க்கு மருத்துவப் படிப்பு நிறையச் சிக்கல் களை எதிர் கொண்டி ருக்கு. மருத்து வங்கிறது ஒரு சேவை. 

சேவை செய்ய ஆசை இருக்கிறவங்க மட்டும் தான் மருத்துவம் படிக் கணும். மக்கள், மருத்துவர்களை தெய்வமா நினைக் கிறாங்க. 
அதனால, மருத்துவம் படிக்கிற மாணவர்கள் இந்தத் தொழிலோட புனித த்தைப் புரிஞ்சுக் கணும். நோயாளியை கனிவாக அணுகணும். அவங் களுக்கு நம்பிக்கை கொடுக் கணும்.

நம்பிக்கை தான் பாதி மருந்து. அதைக் கொடுக்கத் தவறக் கூடாது...’’ என்கிறார் ராமசாமி. மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தால், அங்கேயும் பத்து பேர் சிகிச்சைக் காக வந்து நிற்கி றார்கள். 

ராமசாமி யின் மனைவி பெயர் பகவதி... வீட்டு நிர்வாகி. ஒரு மகள், விஜயா... திருமணமாகி விட்டது. ராமசாமி, பால்வினை நோய்க ளுக்கான 'டிப்ளமோ இன் வெனீரி யாலஜி' (Venereology) முடித்தி ருக்கிறார்.

விருது

பால்வினை நோய்க ளுக்குச் சிகிச்சை யளிக்கும் சிறப்பு மருத்துவர் களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக் கின்றன. ஆயிரங் களில் ஃபீஸ் வாங்க லாம். 
ஆனால், பணத்தை ஒரு பொருட்டாக நினைக் காமல், மருத்துவ த்தைச் சேவை யாகச் செய்து வரும் ராமசாமி போன்றோரின் வாழ்க்கையை மருத்துவ மாணவர் களுக்குப் பாடமாகவே வைக்க லாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)