இறப்பு, வாரிசுச் சான்றிதழின் தேவை என்ன?

வாரிசுச் சான்றிதழ் : ஒரு குடும்பத் தலைவர் இறந்து விடுகிறார். அவரது பெயரில் சொத்துகள், வங்கிப் பணம், முதலீடுகள் எல்லாம் இருக்கின்றன. 
இறப்பு, வாரிசுச் சான்றிதழின் தேவை என்ன?
ஆனால் அவர் யாருக்கும் சொத்துகளை எழுதி வைக்கவில்லை என்றால் மனைவி, பிள்ளைகள் போன்ற அவரது வாரிசு தாரர்கள் அந்தச் சொத்தில், பணம், முதலீடுகளில் உரிமை கோர குடும்ப அட்டை போன்ற ஆவண ங்கள் போது மானதல்ல. 

வாரிசுச் சான்றிதழ் அவசியம். வாரிசுச் சான்றிதழ் வாங்கி யிருந்தால் அந்த நிலத்துக்கு உரிமை கோருவதை யாராலும் தடுக்க முடியாது. 

வாரிசுச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசின் இணையத்தில் (http://cms.tn.gov.in/sites/default/files/forms/cert-legalheir_0.pdf) கிடைக்கிறது.

இந்தப் படிவத்தை நிரப்பி அத்துடன் இறப்புச் சான்றிதழ், வாரிசு உரிமை கோருப வர்களின் இறப்பிடச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். வட்டாட்சியருக்குத் தான் வாரிசுச் சான்றிதழ் கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது. 
ஆனால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோ ர்களின் விசார ணைக்குப் பிறகு இந்தச் சான்றிதழ் வழங் கப்படும்.

இறப்புச் சான்றிதழ் :

இந்தியப் பிறப்பு / இறப்புச் சட்ட த்தின் படி (1969) இறப்பு களைப் பதிவு செய்ய வேண் டியது கட்டாயம். ஒருவர் இறந்து விட்டார் என்பதற் கான ஆதாரச் சான்றிதழ் ‘இறப்புச் சான்றிதழ்’தான். 

இறந்த வரின் பெயரில் உள்ள நிலம், வீடு, முதலீடு போன்ற வற்றை உரிமை கோர இறப்புச் சான்றிதழ் அவசியம். இறப்பு நிகழ்ந்த ஊரின் உள்ளாட்சி அமைப்புகள் தான் இறப்புச் சான்றிதழ் தரக் கூடிய அதிகாரம் பெற்றது. 

உதாரணமாக நகராட்சி, மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் போன்ற அதிகாரி களிடம் இறப்புச் சான்றிதழ் பெறலாம்.

மருத்துவ மனையில் இறக்கும் போது, இறந்தவரின் பெயர், வயது உள்ளிட்ட தகவல்களை மருத்துவ மனையில் தெரிவித்து, இறப்பு நிகழ்ந்ததற்கான காரணத்தைக் குறிப்பிடும் படிவம் IV-ஐ பெற்றுக் கொள்ள வேண்டும். 
வீட்டில் இறப்பு நிகழ்ந்தால், அதை அருகில் உள்ள பிறப்பு / இறப்பு பதிவா ளரிடம் தெரிவித்து படிவம் IV-ஏ-வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

இதுவே இறப்பை உறுதிப்படுத்தக் கூடிய சான்றிதழ். ஒருவர் இறந்த பிறகு முப்பது நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். 

இல்லையெனில் தக்க காரணத்தைத் தெரிவித்து ஒரு வருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
Tags: