கடலில் சினிமா தியேட்டர்... சீனா !

தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டா டுவதற்கு சீனாவிடம் வரலாற்று பூர்வ ஆதாரம் ஏதுமில்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அளித்துள்ள 
கடலில் சினிமா தியேட்டர்... சீனா !
தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவி த்துள்ள சீனா தென் சீனக்கடல் பகுதியில் விமானப் படை தளம் அமைக்க எங்க ளுக்கு உரிமை உண்டு என தெரிவித் துள்ளது.

சீனாவின் தென் பகுதியில், பசிபிக் பெருங் கடலின் ஒரு பகுதி யாக அமைந் துள்ள தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்கு வரத்தும், ஆண்டு தோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப் பிலான சரக்குகள் பரிமாற் றமும் இந்தப் பகுதி வழியே நடை பெறுவதாலும், 

இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப் படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆனால், தென் சீனக் கடலில் எங்களு க்கும் பங்கு இருக்கிறது என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடு களும் உரிமை கொண்டாடி வருகின்றன. 
கடந்த 2012-ம் ஆண்டில் இந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதிக்குட்பட்ட ஒரு தீவில் சான்ஷா என்ற மாதிரி நகரத்தை சீனா உருவாக்கியது.

இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக திஹேக் நகரில் ஐ.நா. சட்ட திட்டங்களின்படி அமைக்கப் பட்டுள்ள சர்வதேச அளவிலான மத்தி யஸ்தம் செய்வ தற்கான நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ், 

2013–ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு வெளியானது.

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோரு வதற்கு சட்ட ரீதியில் எந்த முகாந் திரமும் இல்லை என அந்த தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது. 

இந்த தீர்ப்புக்கு பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா திட்ட வட்டமாக கூறி விட்டது.

இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் சில ஆயிரம் மக்கள் கூட வசிக்காத ஒரு தீவில் சீன அரசு சமீபத்தில் சினிமா தியேட்டர் ஒன்றை திறந்துள்ளது.
சாந்தா என்லாங் சினிமா என பெயரிடப் பட்டுள்ள இந்த தியேட்ட ரில் அதிநவீன டிஜிட்டல் ஒலி அமைப்புடன், 3-டி திரையில் 4-டி புரொ ஜெக்டர்கள் மூலம் படம் காட்டப் படுகிறது. 

கடந்த சனிக்கிழமை இந்த தியேட்டரில் ரிலீசான ‘தி எட்டர்னிட்டி ஆஃப் கியாவோ யுலே’ என்ற படத்தை 

உள்ளூர் வாசிகளில் சுமார் 200 பேர் மிகுந்த ஆரவார த்துடன் பார்த்து ரசித்ததாக சீன ஊடக ங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தினந் தோறும் இங்கு வெவ்வேறு படங்கள் திரையிடப்படும். ராணுவ வீரர்களும் உள்ளூர் வாசிகளும் படங்களை பார்த்து ரசிக்கலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

உட்டி ஐலான்ட் என்றழைக்கப்படும் இந்த தீவில் உள்ள சான்ஷா நகரத்தில் புதிதாக சினிமா தியேட்டரை திறந்ததன் மூலம் தென் சீனக்கடல் பகுதியில் தனது பேராதிக் கத்தை நிலை நாட்ட 
முயற்சித்து வரும் சீனாவு க்கு இதே கடல் பகுதிக் கான உரிமையை தீர்ப்பாய த்தின் மூலம் பெற்றுள்ள வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் கண்டம் தெரிவித் துள்ளன.

சினிமா தியேட்டரை அடுத்து இதே தீவில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறை வேற்ற சீன அரசு திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.
Tags:
Privacy and cookie settings