முதுகு வலி ஏற்படாமல் தடுக்க... வயிற்றுப் பகுதிக்கான பயிற்சி !

1. நேராகப் படுத்துக் கொள்ளவும். வலது காலை மட்டும் 45 டிகிரி அளவுக்கு உயர்த்தவும். 15 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும்.
முதுகு வலி ஏற்படாமல் தடுக்க... வயிற்றுப் பகுதிக்கான பயிற்சி !

பிறகு, பழைய நிலைக்குத் திரும்பவும். மீண்டும் இடது காலைத் தூக்கிப் பயிற்சி செய்யவும்.

2. நேராகப் படுத்துக் கொள்ளவும். கைகளை உயர்த்தாமல் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுத்து, தலையை மட்டும் தூக்கவும். 15 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும்.

பெல்விக் பிரிட்ஜ்

நேராக படுத்துக் கொள்ளவும். இரண்டு பாதங்களும் தரையில் பதியும்படி, நன்றாக முட்டியை மடக்கவும். பிறகு, இடுப்புப் பகுதியை மட்டும் இயன்றவரை மேலே தூக்கவும். 
முதுகு வலி ஏற்படாமல் தடுக்க... வயிற்றுப் பகுதிக்கான பயிற்சி !

கால் மூட்டு, இடுப்புப் பகுதிக்கு செங்குத்தாக இருக்குமாறு, இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். தொடர்ந்து 10 வினாடிகள் இதே நிலையில் இருந்து, பிறகு ஓய்வு நிலைக்குத் திரும்பவும்.
Tags: