கமாடிடி என்றால் என்ன? ஏன் விலை உயருகிறது !

விலை பொருள்கள் அனைத்தும் கமாடிடி என்று தான் அழைக்கப் படும்.எப்படி வகைப் டுத்துவது?
சந்தையில் பொருளாக விற்பனைக்கு வந்திருக்கும் அனைத்தும் கமாடிடி தான்.

கமாடிடிக்கும், பங்கு சந்தைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு நிறுவனம் பல பங்குதாரர்களை கொண்டிருக்கும், 

ஒரு பங்கு வைத்திருந்தாலும் நீங்களும் ஒரு பங்குதாரர் தான், அந்த நிறுவனத்தின் லாப,


நட்ட கணக்குகளை கொண்டு அந்த பங்கின் விலை நிர்நியக்கப்படும். அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருள்கள் கமாடிடி.

பங்குசந்தை முதலீட்டிற்கும், கமாடிடி முதலீட்டிற்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றைப்போல தான். ஒரு பொருளை நீங்கள் வாங்கும் போது

அதன் தரத்தை எடை போடாமல் வாங்குவ தில்லை, அதே போல் தான் பங்குகளும், கமாடிடியை அதிகமாக நுகர்வோர்கள் பயன்படுத்து கிறார்கள், முதலீட்டா ளர்கள் குறைவே! 

நுகர்வோர்களின் எண்ணிக்கை, அந்த பொருளை வெளியிட்ட நிறுவனத்தின் பங்குகளை விலை உயர்த்துகிறது.

கமாடிடி விலையு யர்ந்தால் அந்த நிறுவனங்களின் பங்குகள் உயருமா? செயற்கை யான விலை யேற்றத்தினால் மட்டுமே சாத்தியம். ஒரு பொருள் என்பது, பல கூட்டு பொருள்களால் ஆனது, 

அதை தயாரிக்க மூல பொருள்களின் விலை, ஆட்கூலி, போக்குவரத்து செலவு, சந்தைபடுத்த ஆகும் செலவு, போன்றவை அந்த நிறுவனத்தின் செலவு கணக்கில் வரும், 

ஆக அந்த பொருளின் தயாரிப்பு செலவு அதிகரிக்க, பொருளின் விலையும் அதிகரிக்கலாம்,

ஆனால் அந்த நிறுவனம் லாபம் அடைவதில் எந்த மாற்றமும் இருக்காது.ஆக பங்களிலும் மாற்றம் இருக்காது.

கமாடிடி மட்டும் ஏன் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது?

செயற்கையாக இருந்தாலும், நாட்டின் பண கொள்கை யினால் இது தவிர்க முடியாததாகிறது.

பொதுவாக மனிதர்கள் சேமிப்பு என்ற ஒன்றை தனது மாத பட்ஜெட்டிலேயே வைத்திருக்கிறார்கள். 

பொதுவாக வங்கிகளிலும், பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்கிறார்கள், அங்கே அவர்களுக்கு சரியான ரிட்டர்ன்ஸ் (வருமானம்) கிடைக்காத பட்சத்தில், 

எது முதலுக்கும் மோசமில்லாமல், லாபமும் தருகிறதோ அதில் முதலீடு செய்வார்கள்,

அதற்காக அவர்கள் தேர்தேடுப்பது தங்கம் மற்றும் வெள்ளி.அவைகளும் விலை இறங்கும் தானே? கண்டிப்பாக! 

அனைத்து பொருள்களுமே மறை முகமாக ஒருவித சீசனை (காலத்தேர்வு) கொண்டுள்ளது, அக்ரி

(வேளான்மை) கமாடிடிகள் விளைச்சல் காலத்தில் விலை குறைவாகவும் மற்ற நேரங்களில் அதிகமாகவும் இருக்கும் என்பது அறிந்த ஒன்று, 

அதே போல் தான் மற்ற பொருள்களுக்கும் தேவை அதிகரிக்கும் போது அதன் விலையும் அதிகரிக்கும், தேவை குறையும் போது விலையும் குறையும்.

தற்போது முதலீடு செய்தல் நலமா?

சென்ற ஆண்டு செயற்கையாக எல்லா பொருள்களும் வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டது,

அந்த ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியை தவிர மற்ற பொருள்கள் அனைத்தும் விலை இறங்கியது.

ஆக தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தில் இருக்க காரணம் முதலீட்டாளர்கள் மாற்று

முதலீடாக மற்ற எதையும் நம்பாமல் தங்கம் மற்றும் வெள்ளியிலேயே முதலீடு செய்திருக்கிறார்கள்.

உலக பொருளாதாரம் மீண்டும் நிமிரும் பட்சத்தில் அடிப்படை உலோகங் களான காப்பர், ஜிங்க், அலுமினியம், ஈயம் ஆகியவை மீண்டும் விலை உயரலாம், 


அப்போது தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களின் லாப பணத்தை கையில் பார்க்க கையிருப்பு பொருள்களை சந்தையில் விற்க தொடங்குவார்கள், 

சந்தையில் ஒரு பக்கமாக விற்பனை மட்டுமே நடந்து கொண்டிருக்கும் போது பொருள்களின் விலை வேகமாக சரியும்.
காப்பர், ஜிங்க், அலுமினியம், ஈயம் இவைகளும் உலோகம் தானே! இவைகள் மட்டும் விலை குறைய காரணம்? சந்தையை பற்றி ஆராய வேண்டு மென்றால் 

உலக பொருளாதாரத்தையும் அலச வேண்டும், அது உங்களுக்கு அயர்ச்சியை கொடுக்கலாம்.

சுருக்கமாக, தீடிரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் புதிய வீடு, புதிய வாகனங்கள்,

புதிய வீட்டு பொருள்கள் வாங்குவது சரிந்தது, இவை அனைத்திற்கும் மூல பொருள்கள் தான் காப்பர், ஜிங்க், அலுமினியம், ஈயம்.ஆக இதன் விலையும் குறைந்தது. 

ஆனால் தங்க உபயோகம் ஆபரணமாக மட்டுமில்லாமல் ஒரு காலத்தில் பணமாகவே பயன்பட்டது, அது பயன்பாடு கணக்கில்லாமல் மதிப்பு ரீதியாக என்றும் ஜொலிக்கும்.

இப்போது முதலீடு செய்ய விருப்பம் செய்யலாமா?

தற்போது சந்தை இருக்கும் நிலையில் உங்களது சேமிப்பை தக்க வைத்து கொள்வது முக்கியம். பங்குசந்தையோ, கமாடிடியோ இரண்டிலும் சரிசமமாக ரிஸ்க் உள்ளது. 

சேமிப்புக்கு அதிகமாகவே இருக்கிறது என்று இருப்பவர்கள் மட்டும் பண்ணலாம், மற்றவர்களுக்கு
Tags:
Privacy and cookie settings