புரோஸ்டேட் பெரிதானால் ஏற்படும் விளைவுகள் !





புரோஸ்டேட் பெரிதானால் ஏற்படும் விளைவுகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஆண்களே! உங்களுக்கு 40 வயது கடந்து விட்டதா? – உங்களுக்கும் இந்த பிரச்ச‌னை இருக்கலாம் கவனம் தேவை. ஆண்களே! உங்களுக்கு வயது நாற்பதை கடந்து விட்டதா? சில வேளை உங்களு க்கும் இந்த
புரோஸ்டேட் பெரிதானால் ஏற்படும் விளைவுகள் !
பிரச்னை இருக்கலாம். இல்லா தவர்கள் பாக்கிய சாலிகள் என கூறும் அளவுக்கு, அசவுகரியம் தரும் பிரச்னை இது. ஆண்களுக்கு சிறு நீர்ப்பைக்கு அருகில் அமைந்திருப்பது, ப்ரோஸ்டேட்’ சுரப்பி எனப்படும். இதனை விந்துச்சுரப்பி என்றும் கூறுவர். 
பொதுவாக, 40 வயதை தாண்டுபவர்களுக்கு, இந்த சுரப்பியானது விரிவடையக் கூடும். இதனால் சிறுநீர் கழிப்பதில் சற்று சிரமம் ஏற்படலாம். இதன் விளைவாக சிறுநீர்ப்பை சுருங்குவதுடன், சிறுநீர் வெளியேறும் வழியும் சிறிதாகலாம்.
புரோஸ்டேட் பெரிதானால் ஏற்படும் விளைவுகள் !
சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுவது போன்ற அறிகுறிகள், 60வயதுக்கு மேற்பட்ட ஆண்களில், 70விழுக்காட்டி னருக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற அறி குறிகள் இருப்பவர்கள், உரிய மருத் துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டு ம்.
புரோஸ்டேட் பெரிதானால் ஏற்படும் விளைவுகள் !
இப்பிரச்னை க்கு முறையான சிகிச்சை இல்லாவிட் டால் சிறுநீர் தங்குதல், சிறுநீர் செல்லும் வழியில் தொற்று நோய் ஏற்பட்டு வலி ஏற்படுதல், சிறுநீர்ப் பையில் கற்கள், எரிச்சல், சிறு நீரில் ரத்தம் போன்ற பல்வேறு தொடர் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
சிறுநீரக பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளதால், ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
Tags: