நோன்பு வைக்க பஜ்ர் தொழுகைக்கு முன் நிய்யத் சொல்லலாமா?

0

அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்தே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பு வைக்க பஜ்ர் தொழுகைக்கு முன் நிய்யத் சொல்லலாமா?

பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: நிய்யத் என்பது உள்ளத்தில் ஒன்றை நினைப்பதற்குச் சொல்லப்படும். இன்றைய நோன்பை நோற்க வேண்டும் என்று நினைத்து ஸஹர் உணவு உண்பதே நிய்யத்தாகும். 

ஆனால், இன்று நிய்யத் என்ற பெயரில் சில வார்த்தைகள் (இந்த வருடத்து ரமளான் மாதத்தின் பர்ளான நோன்பை நாளை பிடிக்க அல்லாஹ்விற்காக நிய்யத் வைக்கின்றேன் என்று) சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. 

இப்படி நபி (ஸல்) அவர்கள் செய்யவும் இல்லை. சொல்லித் தரவும் இல்லை. இதற்கு நிய்யத் என்று சொல்லப்படவும் மாட்டாது. 

இவ்வாறே, இன்றைய நோன்பை ஒருவர் நோற்க வேண்டும் என்ற நிய்யத் (எண்ணமில்லாமல்) இல்லாமல் பஜ்ர் வரைக்கும் தூங்கி விட்டால், அவருக்கு அன்றைய நோன்பை நோற்க முடியாது. 
காரணம் அவர் இரவில் நிய்யத் (எண்ணம்) வைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணி பஜ்ர் வரைக்கும் ஒருவர் தூங்கி விட்டால், 
ஸஹர் உணவை உண்ணாவிட்டாலும் அவர் அன்றைய நோன்பை நோற்கலாம், காரணம், அவர் அன்றைய நோன்பை நோற்க நிய்யத் வைத்திருந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)