அஜினோமோட்டோ தரும் ஆபத்துகள் ! #Ajinomoto

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்தது தான். 
அஜினோமோட்டோ தரும் ஆபத்துகள் ! #Ajinomoto
முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற 

வேதிப் பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்து விட்டது.
இந்த அஜினோ மோட்டோவின் விஷத் தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்த போதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் 

மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தை களுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.

கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் 

அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அஜினோ மோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். 

இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.
மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. 

இதனால் குழந்தை களுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படும். 
அஜினோமோட்டோ தரும் ஆபத்துகள் ! #Ajinomoto
ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, 

உடல் வியர்க்க ஆரம்பித்து விடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.
அஜினோ மோட்டே£வைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன் படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், 

பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். 

இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், 

பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெயில் தான் தயாரிக்கப் படுகின்றன.
இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன் படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், 
அஜினோமோட்டோ தரும் ஆபத்துகள் ! #Ajinomoto
பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய் தான் காரணம்.

ஆனால் இந்த எண்ணெயைப் பயன் படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்து விடும் என்கிறார்கள்.
திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப் படுகிறார்கள்.

ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் 

அவற்றில் அஜினோ மோட்டோ கலந்திருப்பதை மறைத்து மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.

சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தை களுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். 

இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர்.
குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக் கொடுப்பர். 

சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை.
அஜினோமோட்டோ தரும் ஆபத்துகள் ! #Ajinomoto
பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத் துடிப்பு,
முடி கொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களாகும்.

பெற்றோர்களே! குழந்தைகளே இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோ மோட்டோ என்ற ஆபத்து தேவையா?

என்ன தான் சொல்லுங்க.. இந்த ஒரிஜினல் கோவால செய்யறதுல கிடைக்கிற டேஸ்ட் மாதிரி இந்த பாக்கெட்ல விக்கிற பவுடருங்கள்ல செய்யற குலாப் ஜாமூன் இருக்கறதே இல்ல.. 

ரொம்ப சிம்பிளா முடிச் சிடலாம்னு நினைக் கிறவங்க தான் இந்த ரெடிமேட் பாக்கெட்டை வாங்கிறாங்க. 

ஆனா நல்ல டேஸ்ட் வேணும்னு நினைக்கி றவங்க சர்க்கரை இல்லாத கோவாவை கடைகள்ல வாங்கியோ 
அல்லது வெண்ணைய் எடுக்காத கறந்த பாலை வாங்கி சுண்டக் காய்ச்சியோ கோவா தயார் பண்ணி குலாப் ஜாமூன் செய்ய விருப்பப் படுவாங்க.
அஜினோமோட்டோ தரும் ஆபத்துகள் ! #Ajinomoto
இந்த சர்க்கரை போடாத கோவா ஆவின் பார்லர்ல கால்கிலோ அரை கிலோ 1கிலோ பாக்கெட்ல கிடைக்குது.. 

இது தவிர தனியா டிபார்ட் மென்டல் ஸ்டோர்ஸ் அல்லது மளிகைக் கடைகளிலும் கிடைக்குது..

உடல் உஷ்ணத்தை நீக்கும் இளநீர் ஆப்பம் செய்வது எப்படி?

இத வாங்கி வந்து அதனோட மைதாவை சிறிது சேர்த்து (300 கிராம் கோவாவிற்கு 100 கிராம் அல்லது 75கிராம் மைதா) 

நல்லா பிசைஞ்சு கொஞ்ச நேரம் ஊற வச்ச பிறகு உருண்டையாக அல்லது நீள வாட்டிலோ உருட்டி நெய்யில் (காஸ் அடுப்பின் வெப்பம் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்) 

பொறித்து எடுத்து ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போட்டு ஊற வைத்து எடுத்து சாப்பிட்டு பாருங்களேன்.. இந்த சுவையே தனி தான்..

பாக்கெட்டுகளில் விற்கப்படும் குலோப் ஜாமூன் மிக்ஸ்களில் அதிகளவு மைதாவும், 

சோடா உப்பும், பலநாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க இரசாய ணங்களும் கலக்கப் படுகின்றது.. 

அஜினோமோட்டோ தரும் ஆபத்துகள் ! #Ajinomoto
எனவே சர்க்கரை போடாத கோவா அல்லது வீட்டில் பாலில் தயாரிக்கும் கோவா தான் குலாப் ஜாமூன் செய்வதற்கு பெஸ்ட்.. 

உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.. 10 நாள் வரை கெட்டும் போகாது. தீபாவளின்னாலே எல்லா கம்பெனி காரங்களும் போட்டி போட்டு கிட்டு ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீன்னு கொடுக்கிறாங்க..
ஆங்கிலேயரை எதிர்த்த வீரன் திப்பு சுல்தானின் வரலாறு !
எக்ஸ்பியரி ஆன அல்லது ஓரிரு வாரங்களில் எக்ஸ்பியரி ஆகும் பாக்கெட்டும் இருக்கலாம்.. ஜாக்கிரதை.. ஆபத்தை விலை கொடுத்து வாங்கனுமா என்ன?
Tags: