HIV எவ்வாறு பரவுகிறது?

HIV பரவுவதற்கு கான வெவ்வேறு வகைகள் இத்தொற்று பாதிக்கப் பட்பவர்களின் உடலிலிருந்து வெளியேறும் இரத்தம் மற்றும் ஆண் பெண் உடலுறுப்பு களிலிருந்து வெளியேறும் திரவங்கள் ஆகியவை மூலமே பெரும்பாலும் இத்தொற்று பரவுவதற்கான முக்கியக் காரணமாகும்.
பாதிக்கப்பட்ட தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால் மூலம் அக் குழந்தைக்குப் பரவுகிறது, சுத்திகரிக்கப் படாத ஊசிகள் மூலமும்,

பாதிக்கப் பட்டவர் களுக்குப் போடப்படும், ஊசியை சுத்தம் செய்யாமல் அதே ஊசி மூலம் மற்றவருக்கும் போடுவதாலும் இத்தொற்று பரவுகிறது,

HIV,AIDS ஆல் பாதிக்கப் பட்டவர்கள் தொடுவதாலோ, முத்தம் கொடுப்பதாலோ, பிளேடு மற்றும் ஊசியால் குத்தினாலோ இந்நோய் வரவு வாய்ப்புள்ளதா? 

HIVஅல்லது AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் உங்களது ரத்தத்துடன் ஏதேனும் ஓர் முறையில் கலந்தாலன்றி நீங்கள் தாக்கப்பட வாய்ப்பில்லை.

மற்றபடி முத்தம் கொடுப்பதாலோ, தொடுவதாலோ இத்தொற்று பரவுவத ற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதே மருத்துவர்களின் கருத்தாகும்.

பாதிக்கப் பட்டவர்களுட்ன உடலுறவு வைத்துக் கொள்ளா விட்டாலும் கூட AIDS வருவதற்கான வாய்ப்பு உண்டா? 

ஆம் வாய்ப்பு உள்ளது.

1) இந்நோய் உள்ளவரின் உடலிலிருந்து வெளிவரும் ரத்தம், அசந்தர்ப்பமாக அவரின் உடலுக்குள் செலுத்திய ஊசி 
சுத்திகரிக்கப் படாமல் வேறொருவர் உடலில் செலுத்தப்ப ட்டால் அந்த ஊசியின் மூலம் பரவ வாய்ப்புள்ளது.



2) அசந்தர்ப்பமாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உபயோகித்த கத்தி, ஊசி போன்றவற்றை உபயோகிப்பதால் பரவ வாய்ப்புள்ளது, இது பெரும்பாலும் டாக்டர்களுக்கோ அல்லது நர்ஸ்களுக்கோ ஏற்படும் அபாயமாகும்,

3) போதை ஊசி போட்டுக் கொள்பவர்க்ள் மேற் கூறியபடி இந்நோய் பாதிக்கப் பட்டவர்களிட மிருந்து ஊசியைப் பகிர்ந்து கொள்வதால் (பாதிக்கப் பட்டவர் உபயோகித்த அதே ஊசியை உபயோகப்படுத்தினால்) பரவும்.

HIV பாதிக்கப் பட்டவருடன் ஒரு பெண் காண்டம் உபயோகித்து உடலுறவு வைத்துக் கொண்டால் அப்பெண் பாதிக்கப் படுவாரா? 

காண்டம் உபயோகிப்பதால் உடலுறவு கொள்ளும் போது பாதுகாப்பாக உணரலாமே தவிர 100% பாதுகாப்பாணது அல்ல. சில சமயங்களில் காண்டம் கிழிந்து போய் பாதிக்கப் பட்டவரின் செமன் மற்றவருக்குப் பரவ வாய்ப்புள்ளது,

ஆண் அல்லது பெண் காண்டம் உபயோகப் படுத்தும் போது சரியான முறையில் வைக்கப்படா விட்டாலும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே காண்டம் உபயோகிக்கும் போது இரு பாலாருமே இதுபற்றிப் பேசி முடிவு செய்ய வேண்டும்.

திருமணத்திற்கு முன் வைத்துக் கொள்ளும் உடலுறவினால் AIDS வர வா ய்ப்பு அதிகமாகவும் அதே சமயம் திருமண வாழ்க்கையில் ஏற்படாமலும் இருக்கக் காரணம் என்ன? 

திருமணத்திற்கு முன் ஒரு ஆண் ஒரே பொண்ணுடன் உறவு வைத்துக் கொண்டாலும் அப்பெண் அல்லது ஆண் HIVஆல் பாதிக்கப் படாதவரை கவலை யில்லை.
ஆனால் இருவரில் யாருக்கு இந்நோய் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம், தவிர திருமணத்திற்கு முன் ஒரு ஆண் அல்லது பெண் பலருடன் உடலுறவு கொள்வ தாலேயே இந்நோய் வருவதற்கும், பரவுவதற்கும் வாய்ப்புள்ளது.

திருமணத் திற்குப் பின் என்றும் போது அப்பெண்னைப் அல்லது ஆணைப் பற்றிய முழுவிபரமும் தெரியவரும், காண்டம் 100% AIDSக்குப் பாதுகாப்பானதா? 

காண்டம் உபயோகிப்பதால் அல்லது ஆணில் உள் உறுப்பி லிருந்து வெளியேறும் திரவம் கலக்க வாய்ப்பில்லை.
சில சமயங்களில் காண்டம் உபயோகிக்கும் போது, காண்டம் வெளிவரவோ அல்லது கிழியவோ வாய்ப்புள்ளதால் அது பாதுகாப்பனது எனலாமே தவிர 100% பாதுகாப்பானது எனக் கூறமுடியாது,

ஒரு காண்டம் உபயோகிப் பதைக்காட்டிலும் இரண்டு காண்டம் உபயோகிப்பது பாதுகாப்பனதா? 

இரண்டு காண்டம் உபயோகிப்பது ஒன்று உபயோகிப்பதைக் காட்டிலும் சிறிது அதிகம் பாதுகாப்பு உடையது, முன்பு கூறியபடியே காண்டங்கள் கிழிய நேர்ந் தாலோ

அல்லது சரியான நேரத்தில் வைக்கப்படா விட்டாலோ தவறு நேரிட வாய்ப்புண்டு. பெட்ரோலியம் கலந்த எண்ணை களை காண்டத்தின் மீது தடவுவதால் காண்டத்தை அவ் எண்ணைய்கள் பலவீனப் படுத்தி விடும், 

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டுள்ள ஒரு ஆணோ அல்லது பொண்ணோ HIV+ உள்ளவருடன் உடலுறவு கொண்டால் பாதிக்கப் படுவாரா? 

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்பதை குழந்தைப் பிறப்பைக் குறைப்பது அல்லது இதில் தடுப்பதுவேயாகும். இது கட்டுப்படுத்துமே தவிர பாதிப்பைக் குறைக்க வழியல்லை. இதில் ஆண்களானால்
இதை சாப்பிட்டால் ஆஸ்துமா வருமாம்
அவர்களின் விந்து அணுவும் பெண்களானால் கரு அணுவும் இந்த அறுவை சிகிச்சை மூலம் வெளிப்பட்டு ஒன்று சேர வாய்ப்பு இல்லை.


HIV+ பாதிக்கப்பட்ட ஆணோடோ அல்லது பெண்ணோடோ உடலுறவு கொள்ள நேர்ந்தால் கட்டாயம் பாதிக்கப் படுவார்கள். (காண்டம் உபயோகித் தாருமே) தாய்க்கு HIV இருந்து அவளது கர்ப்பத்தி லுள்ள குழந்தை பாதிப்படையுமா? கர்ப்பத்திலுள்ள குழந்தையைப் பாதிக்காது.

1) ஆனால் குழந்தை பிறந்தவுடன் நோய் தாக்கும். குழந்தை பிறப்பின் போது அதிகமான ரத்தப் போக்கு ஏற்படுவதால் அந்த ரத்தத்தின் மூலம் நோய் பரவ வாய்ப்பு உண்டு.

2) தாய் பாலுட்டும் போது தாய்ப்பாலின் மூலம் HIV பரவும், சிசேரியன் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு AIDS தாக்கப்படும் வாய்ப்வு உள்ளதா?

சுகப்பிரசவம் மூலம் (AIDS தாயிடமிருந்து) பிறக்கும் குழந்தைகளை விட சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு AIDSன் தாக்கும் குறைவே. தாய் HIV+ஆல் பாதிக்கப் பட்டுள்ளார் என்ற நிலையில் மட்டுமே சிசேரியன் முறை ஏற்றது.

ஆவ்வாறு தாய் HIV+ஆல் பாதிக்கப் படவில்லை என்னும் போது சிசேரியன் தேவையற்றது. இயற்கை பிரசவமே சரியானது. ஆப்ரிக்கா ஆசியா ஆகிய நாடுகளில் மருத்துவ வசதி குறைவா யிருப்பதால் மேற்குறிப்பிட்ட சிசேரியன் முறை அந்தாடுகளில் பயன்படாது.
 
தவிரவும் இந்த சிசேரியன் அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவக் கருவிகளின் சுகாதாரமற்ற தன்மையாலும் கூட தாய் சேய் இருவருக்குமே HIV தொற்ற வாய்ப்புள்ளது.
HIV,AIDSஆல் தாக்கப்பட்ட பெண்ணின் மூலம் அவளது குழந்தையத் தாக்கக் கூடுமா? ஆம். சுகப்பிரசவத்தின் போது பெண்ணின் உடலில் அநேக திசுக்களும் தசைகளும் கிழியவும் அவற்றின் மூலம் இரத்தம் வெளியேறி குழந்தையைப் பாதிக்கும். (குழந்தைக்கும் தொற்றும்)

 சுய இன்பச் செயல்பாட்டினால் AIDS தாக்கக்கூடுமா? 

சுய இன்பச் செயல் பாடடின் மூலம் HIV,AIDS பரவாது, ஓர் ஆண் பெண் தனக்குத்தானே செயலில் ஈடுபடுவதால் இதில் HIVக்கான வாய்ப்பு இல்லை. இதே செயலை இருவர் (ஒரேஇனம்) செய்தால்இ இந்த இருவரில் யாரேனும் ஒருவர் பாதிக்கப் பட்டவராக இருந்தால் மற்றவரும் HIVயால் பாதிப்படைவர்.

ஓரு தந்தையின் மூலம் குழந்தைக்குப் வரவுமா? 

புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தந்தையால் எந்த பாதிப்பும் இல்லை, தந்தையின் மூலம் தாய்க்கு முதலில் பரவி பின் குழந்தை பிறந்தவுடன் அது குழந்தைக்கும் பரவுகிறது.

HIV,AIDS இரத்தத்துடன் எவ்வாறு கலக்கிறது? HIV,AIDS பாதிக்கப்பட்ட ஒரு வருடன் மற்றவர் இரத்த சம்பந்தமோ, உடலுறவின் போது ஏற்படும் திரவச் சேர்க்கையாலோ பரவும் போது இந்த வைரஸ் (கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில்) ஒரு புதிய செல்லில் நுழைய இடம் தேடிவிடும்,
 


அதன்பின் HIV அந்த செல் சுவர்களை அழித்து நுழைந்து தனது உற்பத்திச் சுழற்சியை ஆரம்பித்து விடும்.

இரத்த அணுக்களே HIV,AIDSன் விருந்தாளி என்றால் உடலுறவு எப்படி பாதிக்கும்? 

HIV,AIDS வைரஸ்கள் இரத்த அணுக்களிலேயே அதிகம் காணப் பட்டாலும் உட லிலுள்ள மற்றதிரவங்களிலும் இந்த வைரஸ்கள் அதிகம் இருக்கும்,

பெண் ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் மூலம் ஆணின் விந்தணு மூலமும் பரவ அதிகபட்ச வாய்ப்பு உள்ளது, சில சமயங்களில் உடலுறவின் போது ஏற்படும் இரத்தப் போக்கினாலும் பரவ பாய்ப்புண்டு.

ஒருவன் HIV, AIDSஆல் எவ்வளவு காலத்திற்குள் தாக்கப் படுவான்? HIV வைரஸ் இரத்த ஓட்டத்தில் கலந்த வுடனேயே CD4 செல்களை அழிக்கத் துவங்கும். இந்த வைரஸ்களின் உற்பத்திப் பெருக்க சுழற்சி துவங்கியதுமே முன்னேறிக் கொண்டிருக்கும். உயிர் உள்ளவரை எதுவும் செய்ய இயலாது.

HIV, AIDS பாரம்பரியத்தைப் பொறுத்ததா? இல்லை. HIVன் பாதிப்புக் காளான ஒருவரி டமிருந்து மற்றவருக்குப் பரவுவதேயாகும். இதற்கும் பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தனிப்பட்டவரின் உடலை எவ்வாறு பாதிக்கிறது? HIV தொற்றின் நிலைகள் யாவை? 

 HIV மூன்று விதமாகக்கணிக் கபடுகிறது 

1) ஆரப்பநிலை

2) தீவிரமானது

3) எய்ட்ஸ்.

1) ஆரம்பநிலை HIV பரவி 3 முதல் 6 மாதங்கள் வரை, இந்நிலையில் வைரஸ் கிருமிகள் தீவிரமாக விருந்தியாகும், நோய் எதிர்ப்புசக்தி குறையத் தொடங்கும். வைரஸ் தீவிரமாவதால் ஒருவரிடமிருந்து மற்றொருவ ருக்கு வேகமாகப் வரவும்.
 

2) தீவிரமானது சாவுக்கும் வைரஸ்க் குமான இடைப்பட்ட நேரம். உடலைத் தொடர்ந்து அழித்துக் கொண்டே நிலையா யிருக்கும், CD4ன் எண்ணிக்கை மெதுவாகக் குறையத் துவங்கும்.


இந்திலை 2டில்லிருந்து 10 ஆண்டு வலையிலான எண்ணிக்கை யிலிருக்கும், இந்த கால கட்டம் அம்மனிதனின் உடல் நிலையையும் வைரஸையும் பொறுத்தது.

3) எய்ட்ஸ் CD4ன் எண்ணிக்கை மிகக்குறைந்த நிலையும் வைரஸ் எண்ணிக் கை அதிகப் படுவதுமே ஆகும். இக்காலகட்ட த்திலேயே மற்றவருக்கு பரவ அதிக வாய்ப்புள்ளது.

CD4ன் எண்ணிக்கை பூஜ்யமான போது கூட துணை காரணமாகவே இது சாத்திய மாகும். நோயைப் பரப்பாமலிருக்க உள்ள காரணங்களை நோயாளிக்கு விளக்க வேண்டியது அவசியம்,
மேலும்
Tags: