முதுகு வலியை துரத்தும் டெட் லிப்ட் உடற்பயிற்சி !





முதுகு வலியை துரத்தும் டெட் லிப்ட் உடற்பயிற்சி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
டெட் லிப்ட் என்ற இந்த உடற் பயிற்சியானது மிகவும் சக்தி வாய்ந்த உடற் பயிற்சி நமது தலை முதல் கால் வரை உள்ள சதைகளை நார் நாராக கிழித்து
முதுகு வலியை துரத்தும் டெட் லிப்ட் உடற்பயிற்சி !


பலம் ஏற்றக் கூடிய உடற்பயிற்சி. நன்றாக செய்தால் போதும் தானாகவே உடல் பலம் பெரும். முதுகுத் தண்டை பலப்படுத்த உதவும் உடற்பயிற்சி.
உங்கள் உடலில் விஷம் பரவி விட்டதா?
ஆண்மகளை நிமிரச் செய்யும் உடற்பயிற்சி. இதை டம்பெல் மற்றும் பார்பெல் இரண்டையும் கொண்டு செய்யலாம் ஆனால் டம்பெல்லை விட பார்பெல் தான் சிறந்தது.

பார்பெல்லில் உடலால் எவ்வளவு அதிகமாக தூக்க முடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக வெயிட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

( பயிற்சி ஆரம்பத்தில் Free வெயிட்டில் செய்ய வேண்டும் ). பின் தான் அதிகமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

செய்முறை

ராடில் பார்பெல்லை எடுத்து இருபக்கமும் இணைத்துக் கொள்ளுங்கள். இடுப்பைச் சுற்றி அகலமான பெல்ட் அல்லது துண்டைக் கட்டிக் கொள்ளவும். 

இப்போது பாரை இரண்டு கைகளாலும் படத்தில் உள்ளவாறு பிடித்துக் கொள்ளவும். ஆரம்பத்தில் ஒரே மாதிரி கைகளை பிடிக்கவும். பின்னர் ஒரு உட்பக்கமும் இன்னொரு கை வெளிப் பக்கமும் பிடிக்கவும்.
கைகளின் வேலை பாரை இறுக்கமாக பிடிப்பது பட்டும் தான் இடுப்பால் தான் தூக்க வேண்டும். குனிந்து பாரை எடுத்துக் கொண்டு அப்படியே நிமரவும். 
மீண்டும் ஒருமுறை சொல் கின்றேன் கைகளால் பாரை தூக்கக் கூடாது இடுப்பால் தான் தூக்க வேண்டும். கைகள் வளையவே கூடாது. படித்தில் காட்டி யுள்ளது போல் நிமிரவும். 

பின்னர் மூன்று நொடிகள் கழித்து குனிந்து தரையில் படாமல் மூன்று நொடிகள் பொறுக்கவும். மீண்டும் நிமிரவும், குனியவும். இது போல் செய்து கடைசி ரெப்பில் தரையில் வைத்து விடவும்.
முதுகு வலியை துரத்தும் டெட் லிப்ட் உடற்பயிற்சி !
மூன்று செட்கள் செய்யவும் இந்த உடற் பயிற்சியை தொடை களுக்கு ஸ்குவாட் செய்யும் போது சேர்த்து செய்து விடுங்கள். 

இடுப்பை இரண்டாக வெட்டிப் போட்டவாறு வலிக்கும் புதியதாக செய்தால். வீட்டுக்கு சென்று நன்றாக வெந்நீர் வைத்து குளிக்கவும். உடனே சரியாகி விடும்.

இந்த உடற் பயிற்சி மேற்காட்டிய படத்தில் உள்ள வாறு உடலில் உள்ள நார்களை பலப் படுத்தும், புட்டம், கைகள், கால்கள், கழுத்து, முதுகு, வயிறு என்று அனைத்திற்கும்.
வயிற்றுப் போக்கு.. இதயக்கோளாறு பிரச்சனையா?
இந்த உடற்பயிற்சி சக்தியைத் தரும். சைடு போஸிங்கை அழகாக்கும. ஆண்களின் புட்டப் பகுதியை பட்டர்பிளை போன்று மாற்றி விடும். 
கால்களை நேராக்கும். கூன் விழுந்த வர்களை கூட இதை வைத்து சரி செய்து விடலாம்.

இந்தப்பயிற்சி தரும் முதுகு வலியை விட வேறு முதுகு வலி இருந்தால் ஓடி விடும். பயற்சி பழகி விட்டால் 12 வாரங்களில் முதுகு வலி என்ற பேச்சுக்கு இடமில்லை.
Tags: