சீயக்காயை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் !

இன்றைய தலைமுறை யினருக்கு முடிப்பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றது. இதன் காரணம் முடியை சரியாய் பராமரிக்காமல், கெமிக்கல்கள் மற்றம் ஷாம்பூக்கள் பயன்படுத்துவது. 

எண்ணெய் தடவாமல் ஜெல்கள் மற்றம் ஹேர் கன்டிசனர்களை பயன்படுத்துவது போன்றவைகள் தான். முடி என்பது அழகுக்கு மட்டுமல்ல நம் தலைக்கு பாதுகாப்பும் கூட.

கடும் வெப்பம் தலைவலியாக உள்ளே வராமல், தடுத்து நிறுத்துகின்றது. பாரமான பொருளை தலையில் தாங்கும் போது தலைக்கு பாதுகாப்பாக இருக்கின்றது.

தலையில் அடி விழும் போது கூட தலையில் முடி இருந்தால் பாதுகாக்கப் படுகின்றது. இந்த தலைமுடியை பேணிக்காக்க வேண்டும்.

 இதற்கு சரியான ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். மயிர்க்கால்கள் 5 மில்லி மீட்டர் அளவு ஊன்றி விட்டால் போதும். ஆழமான வேர்கள் செழிப்பாக வளரக்கூடியது. 

முடியும் நன்றாக பருத்திருக்கும். ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல்கள் அனைத்தும் மயிர்க்கால்களின் ஆழத்தை குறைத்து விடுகின்றன. இந்த மயிர்க்கால்கள் வலுவிழந்து வெளிவந்து விடுகின்றன. இதுவே வழுக்கையாக மாறுகின்றது. 

இதனால் சீயக்காய் அல்லது அரப்பு தேய்த்துத் தான் குளிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான தலைக்கு மூவெண்ணெய் (தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய்) கலந்து தடவவேண்டும்.

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் உடல்முழுவதும் தேய்த்து விட்டு, சீயக்காய் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

இந்த குளியல் உடலுக்கு மிகுந்த நன்மையை தரும். சீயக்காயையும் நேரடியாக தேய்க்கக்கூடாது, இது வறட்சியை உண்டாக்கும். கஞ்சியில் கலந்து தலைக்கு தேய்த்து விடலாம்.

தினமும் தலைக்கு குளியல் கூடவே கூடாது. இதனால் கூந்தல் வழுவிழந்து விடும். அழுக்ககற்ற மட்டும் தான் தலைக்கு குளியல் அழகுக்கு கிடையாது. வாரம் இருமுறை அல்லது ஒரு முறை (ஞாயிறு) தலைக்கு குளிக்க வேண்டும். 

முடிப்பராமரிப்பு மிக எளிதானது தான். பணத்தை செலவழித்து வாங்கும் ஹேர் கன்டிசனர்கள், இதை அவர்களின் லாபத்துக்காக அதிகமாக்கி விட்டது என்பது தான் உண்மை.
Tags:
Privacy and cookie settings