ஷூ போட்டால் உஷார்.... பாம்பு இருக்கலாம் !

பெங்களூரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு வீடுகளுக்குள் பாம்பு குட்டிகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூரில் மே மாத இறுதியில் இருந்து மழை பெய்து வருகிறது. 
அதிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரமாகி விட்டால் மழை கொட்டு கொட்டு என கொட்டித் தீர்த்து விடுகிறது. இந்நிலையில் கனமழையால் பாம்புகள்

அதிலும் குறிப்பாக பாம்பு குட்டிகள் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன. அவை வீடுகளில் உள்ள கழிப்பறைகள், கேஸ் சிலிண்டர்கள், வாஷிங் மெஷின், 

ஷூக்கள் உள்ளிட்ட வித்தியாசமான இடங்களில் தஞ்சம் அடைந்து மனிதர்களை அவதிப்பட வைக்கின்றன. இதையடுத்து பாம்புகளை பிடிக்க 33 பேர் அடங்கிய குழுவை பெங்களூர் மாநகராட்சி அமைத்துள்ளது. 

அந்த குழு 24 மணிநேரமும் செயல்பட்டு பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டு வருகின்றது. மழை நேரத்தில் பாம்பு குட்டிகள் வெளியே வருவது சகஜம் என்பதால் மக்களே நீங்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings