அர்விந்த் சுப்ரமணியனா யார் இவரு ? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

அர்விந்த் சுப்ரமணியனா யார் இவரு ?

Subscribe via Email

சர்ச்சைக்குப் பெயர் போன பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி டிவிட்டரில் இவரைப் பற்றி எழுதாத வரை இவர் பெயர் இந்த அளவுக்குப் பிரபலமாகியிருக் குமா என்றால் அது சந்தேகம்தான்.
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பதவி வகிக்கும் அர்விந்த் சுப்ர மணியனை பதவியிலிருந்து நீக் குங்கள் என புதன்கிழமை

காலை சுவாமியின் டிவிட்டரில் தகவல் வெளியானதிலிருந்து இவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கு தொற்றிக் கொண்டதில் வியப்பில்லை.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகு ராம் ராஜனை பதவி நீக்கம் செய் யுங்கள் என்று இரண்டு கடிதத்தை நரேந்திர மோடிக்கு எழுதி பெரும் சர்ச்சையை கிளப்பிய சுவாமி, இப்போது அர்விந்த் சுப்ரமணியன் மீது தனது கணையைத் தொடுத் திருக்கிறார்.

மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் அரவிந்த் சுப்ரமணியன். இவரது ஆரம்ப காலம் சென்னையில்தான். படித் தது டிஏவி-யில். பிறகு பெரும் பாலும் டெல்லி மற்றும் அமெரிக் காவில் வாழ்ந்தவர். 

டெல்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் அகமதாபாதில் உள்ள ஐஐஎம் நிர்வாகவியல் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் எம்-பில் மற்றும் டி-பில் பட்டம் பெற்றவர்.

சர்வதேச செலாவணி நிதியத் தில் (ஐஎம்எப்) ஆராய்ச்சிப் பிரிவில் துணை இயக்குநராக பணி யாற்றியுள்ளார். தற்போதைய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனும் இவரும் ஐஎம்எப்-பில் ஒன்றாக பணிபுரிந்தவர்களாவர். 

``காட்’’ அமைப்பின் உருகுவே சுற்று பேச்சு வார்த்தையின் போது பணியாற்றியவர். 1999 மற்றும் 2000-வது ஆண்டுகளில் ஹார் வர்டு பல்கலைக்கழகம், மற்றும் கென்னடி பல்கலைக் கழகங்களில் பணியாற்றியுள்ளார். 

வளர்ச்சி, வர்த்தகம், மேம்பாடு, எண்ணெய் வளம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள் ளார்.

அமெரிக்க பொருளாதார இதழ்களில் கட்டுரை எழுதியுள் ளார். செய்தித் தாள்களில் கட்டுரை எழுதும் பழக்கம் உடையவர். 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 

அதற்கு முன்பு ரகுராம் ராஜன் இப்பதவியில் இருந் தார். அவர் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டு ஏறக்குறைய ஓராண்டாக தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி வாசம். இவரது மூத்த சகோதரர் வி.எஸ். கிருஷ்ணன், இந்திய வருவாய்த்துறை அதிகாரி (ஐஆர்எஸ்). சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு வகுக்கும் குழுவில் முக்கிய பங்காற்றியவர் வி.எஸ். கிருஷ்ணன் .

மத்தியில் பாஜக பதவி ஏற்ற போது தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் அர்விந்த் சுப்ரமணியன் பெயர் ஏற்கப்பட்டது.

இருப்பினும் பாஜக தலைவர்களில் சிலருக்கு இவரை அப்பதவியில் நியமிப் பதில் அவ்வளவாக உடன்பாடு கிடையாது. கடைசியில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு அர் விந்த் சுப்ரமணியன் நியமனத்தை உறுதி செய்தார். 

இதைத் தொடர்ந்து 16-வது தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். பொது வாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக் காலம் 5 ஆண்டுகள் அல்லது அதிகபட்ச வயது 60 ஆகும்.

ராஜன் பதவி நீட்டிப்பு வேண்டாம் எனக் கூறிவிட்டார். அவரது சகாவான அர்விந்த் சுப்ரமணியம் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்படலாம் என பரவலாக கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில் சுவாமி வீசிய கணையிலிருந்து தப்புவாரா அர்விந்த் சுப்ரமணியன்.
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close