திமுக கூட்டணியில் போட்டியிட்ட இரண்டு முஸ்லீம் கட்சிகளுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது.
தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி (4 தொகுதிகள்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (5 தொகுதிகள்) என 9 தொகுதிகளில் போட்டியிட்டன.
இதில் கடையநல்லுார் தொகுதியில் மட்டும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி பெற்றது. 8 தொகுதிகளில் தோல்வியடைந்தது.
அதேபோல, இந்த தேர்தலில் மற்றொரு வினோதம், கட்சி மாறிபோட்டியிட்ட சிலர் மண்ணை கவ்வினர்.
கட்சி மாறி போட்டியிட்டு தோற்றவர்கள்:
கடந்த தேர்தலில் ஒரு கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.,வாக இருந்து விட்டு, இம்முறை மற்றொரு கட்சிக்கு தாவி போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள்:
கலையரசன் - அனணக்கட்டு - அ.தி.மு.க.,
சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு - ம.தே.மு.தி.க.,
பார்த்திபன் - மேட்டூர் - ம.தே.மு.தி.க.,
சேகர் - கும்மிடிபூண்டி - ம.தே.மு.தி.க.,