நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !

நாக்கை வைத்து உங்கள் உடல் ஆரோக்கிய த்தை கூற முடியும். பழங்கால சீன வைத்திய முறைப்படி, நாக்கு ஒருவரின் ஒட்டு மொத்த உடல் நலத்தையும் கூறும். 
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
நாக்கின் தோற்றம் மற்றும் நிறத்தைக் கொண்டே ஒருவரின் உடல் நலத்தைப் பற்றி கூற முடியும். 

உடல் நலத்தைப் பற்றி அறிய வேண்டுமெனில், ஓர் எளிய சிறிய சோதனையைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். 
புற்று நோய் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன?
அதற்கு கண்ணாடியின் முன் நின்று நாக்கை நன்கு உற்று கவனிக்க வேண்டும்.

ஒரு வேளை உங்களின் நாக்கில் ஏதேனும் புள்ளிகள் அல்லது வித்தியாசமாக ஏதேனும் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நாக்கில் தென்படும் வித்தியாசமானதை புறக்கணித்தால், பிற்காலத்தில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிவப்பு நிற நாக்கு
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
நாக்கு சிவப்பு நிறத்தில் இருந்தால், உங்கள் உடலில் இரும்புச் சத்து அல்லது வைட்டமின் பி12 குறைபாடு உள்ளதாக அர்த்தம். 

குறிப்பாக இந்த மாதிரியான சிவப்பு நிற நாக்கு, சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவோருக்குத் தான் அதிகம் இருக்கும். 

ஏனெனில் சைவ உணவாளர் களுக்குத் தான் வைட்டமின் பி12 குறைபாடு அதிகம் ஏற்படும்.

பழுப்பு நிற நாக்கு
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பழக்கங்களான புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்து வோருக்குத் தான் பழுப்பு நிற நாக்கு இருக்கும்.
ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?
உங்கள் நாக்கு பழுப்பு நிறத்தில் இருந்தால், வாய் துர்நாற்றம் வீசும். எனவே பழுப்பு நிற நாக்கில் இருந்து விடுபட, கெட்ட பழக்கங்களைக் கை விடுவதோடு, தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

வெள்ளைப்படல நாக்கு
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
உங்கள் நாக்கின் மேல் வெள்ளை அல்லது மஞ்சள் கலந்த வெள்ளைப் படலம் இருந்தால், உங்களுக்கு ஈஸ்ட் தொற்றுகள் உள்ளதாக அர்த்தம். 

பொதுவாக இப்பிரச்சனை யானது அளவுக்கு அதிகமான கேண்டிடா உற்பத்தினால் ஏற்படும். 

அதிலும் நீரிழிவால் பாதிக்கப் பட்டவர்களு க்கு மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக் குத்தான் இம்மாதிரி யான நாக்கு இருக்கும்.

சுருக்கங்கள் கொண்ட நாக்கு
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
முதுமையை எய்தியவர் களுக்குத் தான் இம்மாதிரி யான நாக்கு இருக்கும். நாக்கில் விரிசல்கள் மற்றும் வெடிப்புக்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் ஏற்படும். 
குறிப்பாக வயதாகி விட்டால், அவர்களின் நாக்கு இந்த மாதிரி தான் இருக்கும். 

நாக்குகளில் இப்படி விரிசல்கள் இருந்தால், வாயை சுத்தமாக பராமரிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்று அர்த்தம்.

வெள்ளை புள்ளிகளுடன் கூடிய நாக்கு
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
புகைப் பிடிப்போரின் நாக்கில் இருக்கும் ஒரு சில செல்களின் அதிகப் படியான வளர்ச்சியினால் தான் வெள்ளைப் புள்ளிகள் காணப் படுகிறது. 
ஒரு வேளை நீங்கள் புகைப் பிடிக்காத வராக இருந்து, இம்மாதிரியான வெள்ளைப் புள்ளிகள் இருந்தால்,

அதற்கு காரணம் பல் சிராய்ப்பினால் உங்கள் நாக்கு அதிகமாக தேய்மானத் திற்கு உட்படுத்தப்படுவது தான்.

காயங்கள் நிறைந்த நாக்கு
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
நாக்குகளில் காயங்கள் மற்றும் கொப்புளங்கள் அதிகமாக இருந்தால், அதனை உடனே சரி செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். 

இல்லா விட்டால், அது நாக்கு புற்று நோய்க்கு வழிவகுத்து விடும். இது மிகவும் அரிய கொடிய நோய். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

எரிச்சலுடனான நாக்கு
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
நாக்கில் எப்போதும் ஒரு வித எரிச்சல் ஏற்பட்டால், அதனால் காரணம் டூத் பேஸ்ட்டினால் நாக்கில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது தான்.

சில நேரங்களில், இறுதி மாதவிடாய் நெருங்குவ தால், உங்கள் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கும்.
Tags: