பெட்டியில் அடைபட்டும் உயிர் பிழைத்த பூனை !

தவறுதலாக டிவிடிக்கள் அடங்கிய கூரியர் பெட்டியில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று 8 நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
பெட்டியில் அடைபட்டும் உயிர் பிழைத்த பூனை !
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கார்ன்வால் என்ற பகுதியில் இருந்து மத்திய தென் பகுதியில் உள்ள மேற்கு சஸ்சக்ஸ் என்ற பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு கூரியரில் பெட்டி ஒன்று வந்தது.

அதைத் திறந்து பார்த்த அந்நபர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் டிவிடிகளுக்கு மத்தியில் பூனைக்குட்டி ஒன்று பரிதாபமாக உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்நபர் உடனடியாக விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் அளித்தார். 

விரைந்து வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பூனையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து பூனையிடமிருந்த மைக்ரோசிப் மூலமாக அதன் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டார். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெட்டியில் கிடைத்த பூனையின் பெயர் கப்கேப் என்பதும், அதனை அவர் தேடி வருவதும் தெரிய வந்தது.
மேலும், எதிர்பாராத விதமாக டிவிடிகளை வைத்து அட்டைப்பெட்டியைத் தயார் செய்த போது, அதில் அந்த பூனை விழுந்துள்ளது. ஆனால், அது தெரியாமல் அதனை பார்சலில் அனுப்பி விட்டனர்.

கிட்டத்தட்ட 8 நாட்கள் அந்த அட்டைப் பெட்டியில் உணவு, நீர் இன்றி அந்தப் பூனை அடைபட்டுக் கிடந்துள்ளது.

தற்போது சிகிச்சைப் பெற்று வரும் அந்தப் பூனை விரைவில் பூரண நலம் அடைந்து விடும், உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings