கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களா நீங்கள் ?

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்


* உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.

* அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

* முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.

* மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.

* லென்ஸ் தவறி விழுந்தாலும், கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.

* கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.

* லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.
Tags:
Privacy and cookie settings