ஷேவிங் செய்யும் போது சில தவறுகளை செய்யாதீங்க !

இன்றைய காலத்தில் தாடி வைத்துக் கொள்வது ஃபேஷனாகி விட்டது. இதற்கு சோம்பேறித் தனத்தைக் காரணமாகக் கூறலாம். சில ஆண்களுக்கு சரியாக ஷேவிங் செய்யத் தெரியாது. 


ஷேவிங் செய்யும் போது பல தவறுகளை செய்வார்கள். இதனாலேயே காயங்கள், எரிச்சல், அரிப்பு, வறட்சி போன்ற வற்றை சந்திக்க நேரிடுகிறது.

எப்போதும் ஷேவிங் செய்யும் போது பொறுமை மிகவும் அவசியம். பொறுமை யுடன் இல்லா விட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

இங்கு ஷேவிங் செய்யும் ஆண்கள் செய்யும் தவறுகள் கொடுக்கப் பட்டுள்ளன.

இத்தவறுக ளால் தான் அவர்கள் ஷேவிங் செய்த பின் பிரச்சனைகளை சந்திக்கி றார்கள்.

பல நாட்களாக ஒரே ரேசரைப் பயன்படுத்தி னால், சரியாக ஷேவிங் செய்யாதது போல் இருப்பதோடு, சில நேரங்களில் காயங்களை யும் சந்திக்க நேரிடும். 

மேலும் பழைய ரேசரில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும்.

இதை மீண்டும் பயன் படுத்தும் போது, காயம் ஏற்பட்ட இடத்தில் அந்த பாக்டீரியாக்கள் நுழைந்து மோசமாக்கும். 

எனவே அடிக்கடி ரேசரை மாற்ற வேண்டியது அவசியம்.

ஆண்களிடம் உள்ள ஓர் கெட்ட பழக்கம் என்றால் அது தங்களுடைய பொருட்களை நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது தான். 

இப்படி ரேசரைப் பயன்படுத்தி னால், அவர்களின் சருமத்தில் உள்ள கிருமிகள் ரேசரின் வழியே


உங்கள் சருமத்திற்கும் நுழைந்து பிரச்சனைகளை ஏற்படுத்தி, முக அழகைக் கெடுக்கும்.

ஷேவிங் செய்த பின் அப்பகுதி மென்மையாக இருக்க வேண்டு மானால், முதலில் சிறிது நேரம் அப்பகுதியை நீரால் நனைத்து ஊற வைக்க வேண்டும். 

நேரமில்லாமை யால் இந்த காரியத்தை பெரும் பாலான ஆண்கள் செய்வதில்லை.

வேண்டு மானால் நீங்கள் குளித்து முடித்த பின், இறுதியில் ஷேவிங் செய்யலாம். 

இதனால் ஷேவிங் செய்வதும் சுலபமாகும். ஷேவிங் செய்த பின், அவ்விடம் மென்மையாக இருக்க, ஷேவிங் செய்யும் முன் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும். 

அதற்கு அப்பகுதியை கடலை மாவால் சிறிது நேரம் தேய்த்து கழுவி, பின் 5 நிமிடம் கழித்து ஷேவிங் செய்தால்,

இறந்த செல்கள் ரேசரில் அடைப்பை ஏற்படுத்துவதைத் தடுத்து, காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கலாம். 

சில ஆண்கள் வீட்டில் ஷேவிங் க்ரீம் இல்லை என்று அவசரத்திற்கு சோப்பைப் பயன்படுத்துவார்கள். 

ஆனால் இப்படி சோப்பைக் கொண்டு ஷேவிங் செய்தால், அப்பகுதியில் வறட்சி இன்னும் அதிகரித்து, கடுமையான அரிப்பை சந்திக்க வேண்டி  யிருக்கும்.

எனவே அவசரத்திற்கு சோப்பைப் பயன்படுத்தாமல், கண்டிஷனரை வேண்டு மானால் பயன் படுத்துங்கள். 

நேரமாகிவிட்டது என்று சில ஆண்கள் ஷேவிங் செய்யும் போது ஒவ்வொரு முறையும் நீரில் அலசாமல் அப்படியே ஷேவ் செய்வார்கள்.

இப்படி செய்தால் ரேசரில் முடி, க்ரீம், இறந்த செல்கள் போன்றவை அதிகம் சேர்ந்து காயங்கள் ஏற்பட வழிவகுக்கும். 

எனவே ஒவ்வொரு முறையும் தவறாமல் நீரில் ரேசரை அலசி ஷேவிங் செய்யுங்கள்.

தாடி முழுமையாக நீங்க வேண்டுமென்று சில ஆண்கள் அதிக அழுத்தத்தைக் கொடுத்து ஷேவிங் செய்வார்கள்.


இப்படி செய்வதால் ஷேவிங் செய்த பின் எரிச்சலும், அரிப்பும், சில நேரங்களில் காயங்களும் தான் ஏற்படும்.

நீங்கள் அழுத்தம் கொடுத்தால் தான் தாடி முழுவதும் நீங்கும் என்பதில்லை.

மென்மையாக செய்தாலே ரேசரில் உள்ள பிளேடால் முடி முழுமையாக நீக்கப்படும். 


ஷேவிங் செய்த பின் அப்பகுதியில் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படாமல் இருக்க வேண்டு மானால், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம். 

இச்செயலைத் தவறாமல் செய்தாலே ஷேவிங் செய்த பின் ஏற்படும் பிரச்சனை களில் இருந்து விடுபடலாம்.
Tags:
Privacy and cookie settings