தென் தமிழகத்தில் 24 மணிநேரத்தில் மழை பெய்யும் - வானிலை அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர இதர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. தென் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். 


குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 130 சதவிகித கூடுதல் மழை சென்னை மாவட்டத்தில் இயல்பைவிட 130 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. அக்டோபர் 1முதல் 160.5 செ.மீ மழை பெய்துள்ளது. 

இயல்பாக பெய்ய வேண்டிய 69.8 செ.மீ மழை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1-ம் தேதி முதல் இதுவரை 63.9 செ.மீ, மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். 

மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 16 செ.மீ. குடவாசல், பாபநாசம் 13 செ.மீ., திருவாரூர், நாகப்பட்டினம், நன்னிலம் 11 செ.மீ., மன்னார்குடியில் 9 செ.மீ.,

நீடாமங்கலம், மயிலாடுதுறை 7 செ.மீ., தஞ்சை, திருவிடைமருதூரில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: